கவிஞர் பாசனின் ஸ்வப்ன வாசவதத்தா – 1

This entry is part 2 of 9 in the series ஸ்வப்ன வாசவதத்தா

ஸ்வப்ன வாஸவ தத்தா என்ற இந்த நாடகம், அந்த சமயத்தில் பிரபலமாக இருந்த ஒரு கதையின் அடிப்படையில் எழுதப் பட்டது என்று அறிகிறோம். உதயனன், பத்மாவதி என்ற இருவரின் கதை இது. அவர்களின் சந்திப்பும், வாழ்க்கையுமே கதையின் அடிப்படை.   வத்ஸ என்ற ப்ரதேசத்து ராஜா உதயனன். அவன் மனவி வாஸவதத்தா. யௌகந்தராயன் என்ற மந்திரி.  இந்த நூலுக்கு முன்னோடியாக யௌகந்தராயன் என்ற பெயரில் ஒரு நாடகம் இந்த கவியே எழுதியுள்ளார்