பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான் என்றாலும் மகாராஷ்டிர தோல் வியாபாரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் ’எப்படி ஒரு வட இந்தியப் பெண் தமிழகப் பெண்களின் ஒழுக்க குறைவினால் நோய் வந்ததாகத் தெரிவிக்கலாம்’ என்றும் பலத்த எதிர்ப்புகள் எழுந்தன. மருத்துவப்படிப்பு முடித்தபின்னர் சிகாகோவிலும் லண்டனிலும் பணியாற்றி விட்டே சுநீதி சென்னை மருத்துவ கல்லூரியின் நுண்ணுயிரியல் பிரிவில் 1973-ல் இணைந்தார்
