காதல் காட்சிகளில் கூட ’’அடடே இந்த மால்வாவிஸ்கஸ் மலர்ச்செடிகள் பின்னால் இன்னும் கொஞ்ச நேரம் அவர்கள் காதல் மொழி பேசிக்கொண்டிருந்திருக்கலாம், செடியை பார்த்தே ரொம்ப நாளாச்சு ’’என்று அங்கலாய்ப்பது, காதலர்கள் பெயர் பொறித்திருக்கும் மரப்பட்டைகளை கண்டவுடன் ’’இது முதலை மரப்பட்டை அப்படின்னா இது மருத மரம்தான்’’ என்று கூவுவது, ’’என்னதிது பாட்டில் தாமரைன்னு வருது, இவங்க என்னமோ அல்லிக்குளத்தில் நீந்தறாங்களே’’ என்று கொதிப்பது,
