12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் நீலக்குறிஞ்சி கோத்தகிரி பகுதியில் மலர்ந்திருப்பதாகத் தகவல் வந்ததும் மாணவர்களை அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்தேன். காடுகளுக்கும் மலைப்பிரதேசங்களுக்கும் தாவரங்களைக் காணவும் அவற்றைக் குறித்து அறிந்து கொள்வதற்கும் இப்படியான துறை சார்ந்த சுற்றுலாக்கள் செல்வது வழக்கம்தான் என்றாலும் மிக அரிய நிகழ்வான குறிஞ்சியின் மிகைமலர்வைக் காட்டிலும் பெரிதாக வகுப்பறையில் மாணவர்கள் என்ன தாவரவியல் அற்புதத்தைக் கற்றுக்கொள்ளப் போகிறார்கள்?
