பதிலி செய்தலும் நிஜமும்

மதங்கள் கடவுளிடம் சரணடையச் சொல்வதன் காரணமே இந்த சமத்துவத்துக்கான பெருவிழைவுதான். அப்படிப்பட்ட பேரறிவு, பெருங்கருணை, பேருரு, பேராளுமையிடம்தான் அனைவரையும் ஏற்று, அனைவருடனும் ஒரே சமயம் பகிர்ந்து, அனைவருக்கும் குரல் கொடுக்க வாய்ப்பு கொடுத்து, அனைவரும் உண்டு, அனைவரையும் உண்டு, அனைவரும் ஜீரணித்து, அனைவரையும் ஜீரணித்து ஒன்றாக்கும் வாய்ப்பு இருக்கிறது. இத்தகைய பேராளுமைக்கு கால, இட நெருக்கடிகள் ஏதும் இல்லை. முப்பரிமாணம் கூட இல்லை, எப்பரிமாணமும் அதை அடைக்க முடியாத பேராளுமை என்று கடவுளை உருவகித்த காரணமும் அதுவே ஆக இருக்க முடியும்.