தடுப்பூசிகளின் துணைச்சேர்க்கைகளால் பாதிப்பு உண்டா?

This entry is part 16 of 8 in the series பொது நலம்

ஒரு தடுப்பூசியில் அதன் முதன்மைப் பொருளான ஆன்டிஜென் (Antigen) தவிர, அதன் செயல்பாட்டைத் தீர்மானிக்கும் ‘துணைச் சேர்க்கைகள்’ (Adjuvants & Excipients) மிக முக்கியமானவை. குறிப்பாக, தொற்றுநோய்களைத் தாண்டி இன்று புற்றுநோய் சிகிச்சையிலும் இவை புரட்சியை ஏற்படுத்தி வருகின்றன.