பேத்திகள் – பாகம் 2

காலினாவின் முதல் படம் திரையரங்குக்கு வந்த போது, நாங்கள் அதைப் பார்க்க எங்கள் குழந்தைகளுடனும், அவர்களின் பாட்டிகளோடும் போனோம். காலினா இரண்டு மாடி உயரத்துக்கு நீட்டப்பட்டுத் தெரிந்த போது இன்னமும் கூடுதலாகவே அற்புதமாகவிருந்தாள். மர்மமும், சதிகளும் நிறைந்த ஒரு வலையில் சிக்கிய கதாநாயகியாக நடித்திருந்தாள். சி ஐ ஏ அமைப்பால் பிணைக் கைதியாகப் பிடிக்கப்பட்டிருந்தவள், தப்பிக்கிறாள். புத்தியிலும், உடலிலும் தனக்கு உள்ள வேகத்தை அவள் சாதகமாகக் கொண்டாள். கலக்கமில்லாது தந்திரபுத்தியோடு செயல்பட்டு, பெரும் ஆபத்து நேரவிருக்கும் கணங்களிலும் அவள் வாட்டும் ஒற்றை வரி வசனங்களை வீசினாள். விமர்சகர்கள் ‘வஞ்ச வலை’ படத்தைச் சிறிதும் நம்பகமற்ற கதை என்று வறுத்தெடுத்தாலும், நாங்கள் அதைச் சட்டை செய்யவில்லை. எங்களுடைய முன்னாள் பள்ளிக் கூடத் தோழி, எங்களுடைய சிறந்த தோழி, ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறாள், நாங்கள் இங்கே வந்து அதைப் பார்க்காமல் இருப்போமா?

பேத்திகள்

ரஷ்யாவின் பதினான்காவது பணக்காரனாக ஆகும் வயதில்லை ஆலியெக் வோரனோவுக்கு. முப்பத்தி ஐந்து வயதுதான் ஆகி இருந்தது. நிக்கல் கூட்டமைப்பு ஏலத்தில் விற்பனைக்கு விடப்பட்ட போது, அவன் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், விலை போன அதிகாரிகள், குற்றக்கும்பல் தலைவர்கள் போன்றாரிடம் இருந்து திரட்டிய நிதியை வைத்து அதை வாங்கினான். அந்த ஏலம் நான்கரை வினாடிகள்தான் நீடித்தது. 250,100,000 டாலர்கள் கொடுத்து வாங்கினான். ஏலத்தைத் துவக்கப் பயன்படும் முதல் விலையை விட 100 டாலர்கள்தான் கூடுதலாகக் கொடுத்தான். வருடந்தோறும் பல பிலியன் டாலர்கள் வருமானமாகக் காட்டும் ஒரு நிறுவனம் எப்படி இருநூற்றைம்பது மிலியன் டாலர்களுக்கு விற்கப்பட முடியும்?

பாட்டாளிகளின் அரண்மனை – ஆந்தனி மார்ரா

ராணுவப் பணியிலிருந்து விடுவிப்பை, பல்கலைக் கழகத்துக்குப் போகிறவர்களுக்கோ, ஜெயிலுக்குப் போனவர்களுக்கோ மட்டுமே கொடுப்பார்கள். என் நண்பர்களில் சிலருக்கு வேண்டும் அளவு மதிப்பெண்கள் இருந்தாலும், பல்கலைக்கு நுழைவதற்குக் கொடுக்க வேண்டிய லஞ்சப் பணத்தைக் கொடுக்க அவர்களிடம் வசதி இல்லை, வேறென்ன செய்வது, அதனால் நாங்களெல்லாம் ஜெயிலுக்குப் போகத் திட்டமிட்டிருந்தொம் அதற்கு உயர்கல்வி என்று நாங்கள் பெயரிட்டோம். உயர்நிலைப் பள்ளியின் கடைசி வசந்த காலத்தில், வகுப்புகளுக்குப் போகாமல் டாவ்ரைட் தோட்டத்தில் பியர் குடித்தோம்.