ஹால் ஃபிரான்சிசும் தாமஸ் வுல்ஃபும்

அவன் எழுதிய கதைகள் ‘அட்லாண்டிக் மந்த்லி’ மற்றும் ‘சாட்டர்டே ஈவ்னிங் போஸ்ட்’ போன்ற சஞ்சிகைகளில் வெளியாகி இருந்தன. ஆனால் அவன் ஹாலிவுட் வந்த போது அவன் புத்தகம் எதுவும் பதிப்பித்திருக்கவில்லை. எஃகு ஆலைகளில் வேலை செய்பவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட திரைப்படத்திற்கு எழுதும் வாய்ப்புக்காக ஒரு படத் தயாரிப்பாளரைத் தேடி வந்தான். ஒரு வழியாக ஒரு தயாரிப்பாளரும் கிடைத்தார். ஆனால் அவனுடைய எல்லைக்கு அப்பாற்பட்ட நியூ யார்க்கின் அறிவு ஜீவிகளைப் பற்றி எழுதச் சொன்னார்கள். இருந்தும் பன்னிரண்டு வாரங்கள் பணி செய்தான். ஒவ்வொரு வாரமும் தான் அதுவரை வாழ்நாளில் பாத்திராத அளவு பணத்தை காசோலையாகப் பெற்றுக் கொண்டான்.

ஃபின்லாண்டியா

ரயில் நின்றதும் கீழிறங்குகிறீர்கள், அல்லது கப்பல் கரை சேர்ந்ததும், இறங்குவதற்குப் போடப்பட்ட மரப்பாதை வழியே கீழிறங்குகிறீர்கள், அல்லது விமானம் கீழே இறங்கித் தரை தொடுகிறது, உங்கள் கால்கள் எங்கே நியாயமாக இருக்க வேண்டுமோ, அந்தத் தரையில் மறுபடி பதிகின்றன, ஆனால் அங்கெல்லாம் வெறுமைதான் இருக்கிறது. நீங்கள் வந்து சேர்ந்தாயிற்று, ஆனால் நீங்கள் எங்குமே சேரவில்லை. அந்த நகரத்தின் பெயர் வரைபடத்தில் இருக்கிறது. ரயில் நிலையத்தில் பெரிய எழுத்துகளில் அந்தப் பெயர் இருக்கிறது. நாம் ரொட்டி வாங்கக் கொடுக்கிற புதுக் காசுகளில் அந்த நாட்டின் பெயர் பொறித்திருக்கிறது, ஆனால் நீங்கள் வந்து சேர்ந்திருப்பது எங்குமில்லை, மேன்மேலும் வேறு இடங்களுக்கு நீங்கள் போகப் போக உங்களுக்குப் புரிவதெல்லாம், மனிதனுக்குச் சேருவதற்கு பூமியில் ஒரு இடமும் இல்லை என்பதே.