யாதும் ஊரே, யாவரும் கதை மாந்தர்

“மகா பாரதத்தில் போர்க் காட்சிகளைக் காணவியலா திருதராட்டினனுக்கு சஞ்சயன் போல,” பல நாடுகளுக்கும் போக வாய்ப்பில்லாதவர்களுக்கு, தான் வசித்த நாடுகளில் தாம் கண்டதையும், அனுபவித்ததையும் சுவையான கதைகளாக காட்சிப் படுத்திக் கொண்டே போகிறார். ஒரு கதை சொல்லியாய் இருப்பது மற்ற படைப்புத் தொழில்களை விட சிரமம் வாய்ந்தது. ஒவ்வொரு கதையும் மற்றவர் தொடாத ஒரு விசயமாகவும், புதிய மொழியாகவும் இருக்கவேண்டும். இச்சிரமத்தை வென்று 140-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல கட்டுரைகள், சில நாவல்கள், மற்றும் உலக எழுத்தாளர்களிடம் சுவையான நேர்காணல்கள் என்று 60-ஆண்டுகளில் இவர் தொட்டிருக்கும் தளங்கள் இதுவரை வேறு எவருக்கும் வாய்க்காதது. அவற்றிலிருந்து சிலவற்றை இங்கே சில நிமிடங்களில் சொல்ல முயல்வது…