இன்னா செய்தாரை என்னவோ செய்தல் பற்றி ஒருத்தர் சொல்லிக்கொண்டிருக்கும் போது ராமாமிருதத்தின் கவனம் எங்களிடமிருந்து மெதுவாக நழுவுகிறது. எங்கள் கோஷ்டியில் சேர்ந்துகொண்ட நண்பரின் 5 வயது பெண்ணை அடர்த்தியான புருவங்களின் நிழலில் இருக்கும் தன் சௌகர்யமான பூனைக் கண்களால் பார்க்கிறார். “அவரை வரைவது சுலபம் என்று நினைக்கிறேன். She seems to be all lines”.
Author: sujatha
அந்த கிராமபோன் வாசனை
கர்நாடக சங்கீதத்தில் மணி ஐயர் அந்தக் காலத்துத் தென்தூல்கர் என்று சொல்லவேண்டும். ‘சரசசாமதான’, ‘நாத தனுமனிசம்’, ‘துன்மார்க்கசரா’, ‘எப்போ வருவாரோ’ போன்ற கிருதிகளை அவர் பாடும் விதமே தனி. தன் குரலின் எல்லைகளை அதிகப்படுத்தாமல் மிகத் திறமையாகப் பயன்படுத்திக்கொண்டு அவசரமாக ராகம் பல்லவி அனுபல்லவி பாடிவிட்டுச் சரணத்துக்குக் குறிப்பாக, கல்பனாஸ்வரங்களுக்கு விரைவார். ஸ்வரங்களை அப்படியே நம் மேல் வர்ஷிப்பார். அதன் உற்சாகம் அரங்கம் பூராவும் நிரம்பும். மதுரை மணி ஐயர் கச்சேரியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மற்றவர் கச்சேரிகளையும் கேட்க ஆரம்பித்தேன். ராகங்களைக் கண்டுபிடிக்கவும் ஆரம்பித்தேன்.
தி.ஜானகிராமன்
ஜானகிராமனுக்கு தமிழ் இலக்கிய சரித்திரத்தில் பிரதானமான இடம் அவரது சிறுகதைகளால்தான் என்று எனக்குத் தோன்றுகிறது. மிக நுட்பமான பார்வையும் தஞ்சாவூர்த் தமிழின் சரளமும், சிறுகதைக்கு மிக முக்கியமான காலப் பிரமாணமும் அவர் எழுத்தில் இருக்கும். சிக்கனமான வார்த்தை அமைப்புகளில் மிக அதிகமான விஷயங்களைச் சொல்லிவிடுவார். அவர் நடையில் இருந்த நளினத்தை இன்னும் யாரும் எட்டிப் பிடித்ததாகத் தெரியவில்லை.