சம்பாஷணை

“பாருங்க. நேத்திக்கி காலைல என் வீட்டுக்காரர் ஆஃபிஸ் போகிற வழீலெ ஒரு நியூஸ்பேப்பர் வாங்கறத்துக்கு தாமசிச்சார். அவர் எப்போதுமே டைம்ஸ்தான் வாங்குவார், அதையும் ஒரே கடைலதான் வாங்குவார், என்னன்னா நேத்திக்கி அந்தக் கடைக்காரர்கிட்டெ என் வீட்டுக்காரருக்குக் கொடுக்க டைம்ஸ் ஒரு பேப்பர் கூட இல்லை, மாலைல வீட்டுக்குத் திரும்பினப்புறம் ராத்திரிச் சாப்பாட்டுல மீன் தீய்ஞ்சு போயிருக்கு, இனிப்பு வகையறால இனிப்பு அதிகமுன்னார், அப்புறமா அங்கெயும் இங்கெயும் உக்காந்துகிட்டு சாயந்தரம் பூராவும் தனக்குத் தானே பேசிக்கிட்டிருந்தார்.”

லாட்டரி

மிசர்ஸ் ஹட்சின்சன் கூட்டத்தினூடே பார்க்க முனைந்தவளாய் தன் கழுத்தை நீட்டி தன் கணவனும் குழந்தைகளும் முன்புறத்தில் நின்றுக் கொண்டிருப்பதைத் தேடிக் கண்டுபிடித்து விட்டாள். தான் விடைபெறுவதைக் குறிக்கும் வகையில் மிசர்ஸ் டெலாக்ரோவின் கரத்தில் தட்டிவிட்டு கூட்டத்தின் உட்புகுந்து தனக்கு வழி செய்து கொள்ளத் துவங்கினாள். சிரித்த முகத்துடன் அவளுக்கு வழி விட்டுப் பிரிந்தனர் அங்கு கூடியிருந்தவர்கள்