மாமனார் மாமியாரை ஊரிலிருந்து ஒரு இரண்டு மாதம் அபுதாபி வரவழைக்க விசிட் விசா எடுக்க வேண்டும். அதற்கு இந்த ‘தௌதீக்’ அவசியம். அப்பா அம்மா என்றால் கொஞ்சம் தள்ளிப்போனாலும் பரவாயில்லை. மாமனார் மாமியார் விஷயம். அப்படியெல்லாம் விட்டு விட முடியாது. அதுவும் நாளை வியாழக்கிழமை. வெள்ளி சனி விடுமுறை. இன்றைக்கு ‘தௌதீக்’ எடுத்துவிட்டால் சாயந்திரமே டைப்பிங் சென்டரில் கொடுத்து விசா மனுவை தயார் செய்து விடலாம். நாளை போய் அர்ஜன்ட் பிரிவில் விண்ணப்பித்து விசாக்களை எடுத்து விடலாம்.
ஆசிரியர்: செல்வராஜ் ஜகதீசன்
வாக்கு
“நம்பிக்கையில்லேன்னா இதுங்கெல்லாம் ஏன் இங்க வருதுங்க?”
மூர்த்தி அந்த கட்டிடத்தின் உள்ளே நுழையும்போது, யாரோ யாரையோ சொல்லிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது. மூன்று நான்கு குடும்பங்கள் ஏற்கெனவே காத்திருந்தார்கள். வரிசையில் அடுத்திருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார். என்ன ஏதென்று விசாரித்தார். கொஞ்சம் முன்னால் வந்து போன ஒருவன் இடக்கு மடக்காக குறுக்கு கேள்விகள் கேட்டதால் பிரச்சினை என்று தெரிய வந்தது. அப்படி என்ன பிரச்சினைக்குரிய கேள்விகளை அவன் கேட்டிருப்பான் என்று தெரியவில்லை. எது எப்படியோ எல்ல்லாவற்றுக்கும் அடிப்படை ஒரு நம்பிக்கைதானே.
கடன்
ஒரு அலுவலக நண்பனோடு, ஆழ்வார்பேட்டையில் மாதந்தோறும் கடைசி சனிக்கிழமைகளில் நடைபெறும் இலக்கிய கூட்டமொன்றுக்கு போய் விட்டு, பிரிந்து செல்லும் முன், ஒரு காபி சாப்பிடலாமென்று நுழைந்த ஓட்டலில்தான் இப்படி தியாகுவைப் பார்க்க நேர்ந்தது. கோடை வெயிலின் உக்கிரம் அந்த இரவு நேரத்திலும் இருந்தது. நல்ல பேன் காற்று வரும் இடமாய்ப் பார்த்து அமர்ந்தோம்.
கவிஞர்களின் நாவல்கள்
யூமா வாசுகியின் “மஞ்சள் வெயில்” படித்து முடித்த சில நாட்கள் அந்த நாவலில் கையாளப்பட்டிருந்த மொழி பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். ஒரு தலைக் காதல் தான் கதை. ஆனால் அது சொல்லப்பட்டிருந்த விதம் நாவலைக் கீழே வைக்க விடாமல் ஒரே மூச்சில் (இரவு இரண்டு மணி வரை) படிக்கச் செய்தது அதன் மொழியே என்று இப்போது தோன்றுகிறது.
கவிதைகள்
எல்லோருக்கும் கை அசைத்தபடி
வந்து கொண்டிருந்த மகனின்
மகிழ்ச்சி இழைகளால் ஆன
முகத்தை அணிந்தபடி
சென்று கொண்டிருந்தேன்.
கொடைக்கானல்
தண்ணீர்ப் பூக்களின்
பரஸ்பர பரிமாறல்களுடன்
கூச்சலிடும் குழந்தைகளின்
குதூகலத்தை ரசித்தபடி
தள்ளாத வயது படகோட்டி.