பகையைத் தேடி

நாட்கள் மெதுவாக நகரத் தொடங்கின. வனப்பாக உடல் மாறுவதற்கு பதிலாக, நான் குண்டாகத் தொடங்கினேன். என் மனநிலையைப் பற்றியும் யோசித்துப் பார்த்தால், அந்த ஒரு வருடம் கழித்து என் சுற்றுலாவின் முடிவில் எனக்கு ஒரு வயது கூடியிருந்தது அவ்வளவே! வேறு எந்த மாற்றமும் இல்லை. நான் ராணுவத்திலிருந்து வெளியேறப்போகிறேன். ஆனால் சேர்வதற்கு முன்பு எப்படியிருந்தேனோ, அப்படியேதான் வெளியே போகப்போகிறேன். என்னுடைய அதே சிறிய தடுக்கறைக்கு, என்னுடைய எக்ஸெல் கோப்புகளுக்குத் திரும்பிச் செல்லப்போகிறேன்.