வில்வபுரத்து வீடு

சுண்ணாம்புச் சுவர், நாட்டு ஓடு இதமாய் தரும் குளிர்ச்சியை விட ஒரு காற்றுப் பதனாக்கி தரும் அதீத குளிர்ச்சிக்கு பழக்கப்பட்டவர்கள் வேறு என்ன செய்வார்கள். பழக்கூழில் கூட சர்க்கரையும் பனிச் சீவலும் சேர்த்து உண்ணப் பழகியவர்கள் வேறெப்படி யோசிப்பார்கள். எனக்குத்தான் ஒவ்வவில்லை. சந்தனக்கட்டைக்கு எதற்கு சவ்வாது பூச்சு? செந்தாழம்பூவுக்கு எதற்கு வாசனைத் திரவிய குளியல்?

தமிழே துணை

“அங்கெல்லாம் போலீஸ் கார் உன் காருக்கு பின்னால வந்து லைட் போட்டு காமிச்சா நீ உன் வண்டிய ரோட்ல ஓரமா நிறுத்தி ஜன்னல இறக்கிட்டு ரெண்டு கையையும் ஸ்டேரிங்ல வச்சு சீட்லயே உட்காந்து இருக்கணுமாம். அவன் உன் வண்டிகிட்ட வந்து உன் டைல் லேம்ப தொட்டுட்டு, பின்னாடி கதவுக்கிட்ட நின்னு தலைய மட்டும் நீட்டி உள்ள எட்டி பார்த்துட்டு நீ சரியான பொசிசன்ல உட்கார்ந்து இருந்தா மட்டும்தான் உன் கிட்ட வந்து பேசுவாங்களாம்.”

நாய்ப் பொழப்பு

இவனுக்குத்தான் எஞ்சிய எட்டு கி.மீ.யை அந்த வண்டியைத் பின்தொடர்ந்தபடி கடக்க, மேலும் ஒரு முக்கால் மணி நேரம் ஆனது. ஒரு வழியாய் நிலக்கல் அடைந்து அவர்கள் சொன்ன கோவிலுக்கு அருகில் வண்டியை நிறுத்திவிட்டு பார்க்கும்போது மணி ஐந்தை நெருங்கி இருந்தது.
அப்படியே உறங்கி இருக்கலாம் அவன், இருந்தும் அயர்ச்சியை மீறிய பசி இருந்தது அவனுக்கு. கொஞ்சம் பசியாற்றினால் நல்ல தூக்கம் வரும் என்று அருகில் இருந்த தேனீர் கடைக்குச் சென்று இரண்டு பழம்பஜ்ஜி எடுத்துத் தின்றுகொண்டே “சேட்டா ஒரு ச்சாயி” என்றான். அயர்ச்சிதான் என்றாலும் ஓட்டுனர்களுக்கு என்று ஒரு வரம் உண்டு.

கேட்கத் தவறிய கிணற்றுத் தவளையின் குரல்

எனக்கு ஒரே ஆச்சர்யம். தவளைகள் பேசுமா? என் கிணற்றில் மட்டுமா இல்லை என் ஊர் முழுக்க இப்படித்தானா? இல்லை இதேதும் அசரீரியா? புரியவில்லை எனக்கு. ஒருவேளை காலங்காலமாக தவளைகள் பேசுமோ? நாம்தான் அவைகளிடம் இதுவரையில் வாயெடுத்துப் பேசியதில்லையோ? இருக்கவே இருக்காது, நமக்குத்தான் அது பேசியது போன்றொரு பிரமை தோன்றியிருக்கும். மீண்டும் ஒருமுறை பேசிப் பார்த்தால் தெரியும்.