வண்ணநிலவனுடன் ஒரு சந்திப்பு

ஏராளமான படைப்புகளைப் படித்துப் படித்து மனம் ஒருவிதமான மொழிசார்ந்த தளத்தில் பக்குவமாக இருக்கிறது. இதனுடன் நமது சொந்த அனுபவங்கள் சேரும்போது படைப்பு வெளியாகிறது என்று நினைக்கிறேன். என்னுடைய முதல் சிறுகதையான ‘மண்ணின் மலர்கள்’ என்ற சிறுகதை, சாலையோர மரம் ஒன்று வெட்டப்படுவதைப் பற்றியது. இது ஒரு உண்மைச் சம்பவம். பாளையங்கோட்டையில் முருகன்குறிச்சி பஸ் நிறுத்தத்தில் பலருக்கும் நிழல் தந்த மரத்தை எதனாலோ வெட்டினார்கள். அது எனக்குக் கஷ்டமாக இருந்தது. அந்த மனநிலையைத்தான் சிறுகதையாக எழுதினேன்.