புண்ணியம்

ஆனா, பள்ளிக்கூட வேலை போனபிறகு ரெண்டு மாசம் ரொம்ப கஷ்டப்பட்டேன். எந்த ஸ்கூலிலும் பணிநியமனம் என்பதே கிடையாது. இருக்கும் வாத்தியார்களுக்கே அரை சம்பளம்; சில ஸ்கூல்களில் அந்த அரை சம்பளம்கூட ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை. அப்படி இருக்கச்சே, புதுசா வாத்தியார்களை ஏன் நியமிக்கப்போறா? அஞ்சுபேரு — அம்மா, ஆம்படையா, ரெண்டு குழந்தைகள், நான் — ரெண்டு வேளையாவது சாப்பிடணும் இல்லையா?’

பெருந்தேவிக்கு பி. ஜி. உடௌஸ் வேண்டாம்

‘அப்பா டாக்டர். பேரு சடகோபன். வெறும் எம்.பி.பி.எஸ்.தான், ஆனால் நல்ல ப்ராக்டிஸ். அவர்கிட்ட ரெகுலரா வைத்தியம் பண்ணிண்டவா இன்னும்கூட சிலபேர் இருக்கா. க்ளினிக் வெராண்டாவில்தான். நோயாளிகள் இல்லாதபோது இங்க வந்து வாசிச்சிண்டிருப்பார். அவர் போனபிறகு இந்த லைப்ரரிக்கு வாசகர் கிடையாது. எனக்கு வாசிக்கும் பழக்கம் ரொம்ப குறைவு. ஆனா மாசம் ஒரு தடவை தூசிதட்டி சுத்தம் பண்றோம்.’

இதை என்னவென்று சொல்வது?

”சுற்றுச்சூழல்காரர்களின் ஆர்வக்கோளாறினால் தப்பித்தது. ஒரு மரத்தில கத்தியை வெச்சா, நாலு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வந்து நிக்கறாங்க. இது கமர்ஷியல் ஏரியா. இவ்வளவு வணிக வளாகங்களுக்கு நடுவில இங்க எதுக்கு தோப்பும் துரவும்?  இந்தக் காட்டை எப்பவோ அழித்து இந்த இடத்தை கமர்ஷியலா டெவலப் பண்ணியிருக்கணும்…”

வேக்ஸினேஷன் வைபவம்

‘ஓ காட்!’ என்று கூச்சலிட்டாள் மைதிலி. ‘இந்த ஜனசமுத்திரத்தில் இறங்கினால் நமக்குத் தடுப்பூசி கிடைக்கிறதோ இல்லையோ, கரோனா வைரஸ் கட்டாயம் கிடைக்கும். திரும்பிப் போயிடலாம், வாங்கோ.’ முகக்கவசத்தை ஒரு கையால் அழுத்திக்கொண்டு இன்னொரு கையால் திறந்த கார் கதவை மூடி கண்ணாடியையும் ஏற்றினாள். இருநூறு இருநூற்றைம்பது பேர்களை ஜனசமுத்திரம் “வேக்ஸினேஷன் வைபவம்”

சீதுரு

‘கோதண்டபாணி, சாமி… அளவுக்கார கோதண்டபாணி. எங்கப்பா பேரு அளவுக்கார சீராமுரு. வேண்டராசி அம்மன் கோயில் தெருவுல, சேஷப்ப செட்டியார் செக்குமேடு தாண்டி…’

இதினிக்கோ

‘யு மஸ்ட் பி ஜோக்கிங்! ராஜப்பா வாத்தியார் சொல்லிக்கொடுத்து கணக்கு புரிஞ்சிண்டவா யாராவது இருக்காளா? ஆனால் அந்தக் கூத்தும் நடந்தது. ஆரம்பித்துக் கொஞ்ச நாளிலேயே டியூஷன் கடை மூடியாகிவிட்டது. வகுப்பறை சகிப்புத்தன்மை என்பது நம் தலைமுறையோடு முடிந்துவிட்ட விஷயம் என்று தோன்றுகிறது, முகுந்த். பட் எ குட் ட்ரெண்ட், வாட் டூ யு ஸே?’

யார் பைத்தியம்?

அருளானந்தம் யோசனை செய்தார். ஒரு வாரத்தில் இந்த மனிதர் வேறு எதாவது நியமன அழைப்பை ஒப்புக்கொண்டுவிட்டால்? தேர்வுக்குழுவை இன்று மதியமே கூட்டிவிட வேண்டியதுதான்.