அசோகமித்திரனின் கதையுலகில் பெற்றோரும் பிள்ளைகளும்

அசோகமித்திரன் அதிகாரமுடைய ஆளுமைகளை மையப்படுத்தி அதிகம் எழுதியதில்லை. இதுவும் அவருடைய புனைவுலகில் குறிப்பிடத்தக்க அம்சம். விதிவிலக்காக, ’கரைந்த நிழல்கள்’ நாவலில் ஒரு பாத்திரமான ஸ்டூடியோ அதிபர் ராம ஐயங்கார். நாவலின் ஒரு அத்தியாயத்தில் ராம ஐயங்கார் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இருக்கும் தன் பங்களாவில் தன்னிடமிருந்து அன்னியப்பட்டுப் போயிருக்கும் தன் மகனைச் சந்திக்கச் செல்கிறார். தன் உடல்நிலை சீர்கெட்டுக்கொண்டிருக்கிறது என்பது அவருக்குத் தெரிந்துவிடுகிறது.