குரங்கை விட மனித இனத்தின் அறிவு உயர்ந்து இருப்பதில் முக்கியமானது என்ன்வென்றால், நம்மால் வேகமாக சிந்திக்க இயலும் என்பதல்ல, நம்மால் தரமாக சிந்திக்க இயலும் என்பது தான். குரங்குகளின் சிந்தனை வேகப்படுத்துவதன் மூலம் மட்டும் அது மனிதனாகப் பரிமாண வளர்ச்சி அடைய முடியாது. அதன் சிந்தனையில் தரத்தில் பாய்ச்சல் நிகழ வேன்டும். இன்னும் எளிதாகச் சொல்ல வேண்டுமென்றால், குரங்குகள், மனிதர்களையும் கட்டிடங்களையும் வேறுபடுத்திப் பார்க்க இயன்றாலும், மனிதர்கள் தான் கட்டிடங்களைக் கட்டினார்கள் என்று புரிந்து கொள்ள இயலாது. ஏன், அந்த வகையில் கற்பனை செய்யக் கூட இயலாது. இது தான் சிந்தனைத் தரத்தின் வேறுபாடு.
Author: மீனாக்ஸ்
செயற்கை நுண்ணறிவு (AI)
நாம் செயற்கை நுண்ணறிவு என்பதை சரியாகத் தான் அணுகிக் கொண்டிருக்கிறோமா என்று அடிப்படைகளையே அசைத்துப் பார்க்கின்ற எதிர்த் தரப்புக் கருதுகோள் உள்ளது. மனிதனின் மூளை ஒரு கணினியைப் போன்றது என்று எங்காவது யாராவது சொல்லக் கேட்டிருப்பீர்கள். இது உண்மையான கூற்றுத்தானா என்பதே ஒரு சாரார் எழுப்பும் கேள்வி. கணினியானது, அறிந்து கொள்ளும் அனைத்தையும் தகவல்களாக (“பைட்டுகளாக”) மாற்றிச் சேமித்து, தேவைப்படும் போது அணுகி வெளிக்கொணர்கிறது. ஆனால், நமது மூளை, இப்படித் தகவல்களைச் சேமித்து வைப்பதில்லை, அது அறிந்து கொள்ளும் செய்திகளுக்கேற்ப கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டே இருக்கிறது என்பது மாற்றுத் தரப்பு. நாம் கேட்ட ஒரு கதையை நாம் வேறொருவரிடம் மீளச் சொல்லும் போது ஒவ்வொரு முறையும் சிற்சில தகவல்கள் மாறூவது, இன்னும் இது போன்ற சில சோதனைகளைக் கொண்டு இப்படிக் கருதுகிறார்கள்.
செயற்கை நுண்ணறிவு: எந்திரன் 2.0
செயற்கை அதி நுண்ணறிவு (Artifical Super Intelligence). நாமறிந்த எல்லாத் துறைகளிலும், இருப்பதிலேயே சிறந்த மனித மூளைகளை மிஞ்சும் அறிவு கொண்ட நிலை இது. அறிவியல் சார்ந்த துறைகள் மட்டுமின்றி, கலை, சமூக நடத்தை, நிர்வாகம், என்று எல்லாமே இதில் அடக்கம். பாடங்களில் சோபிப்பது மட்டுமில்லாமல், விளையாட்டிலும் இன்னும் பல எக்ஸ்ட்ரா கரிகுலர் நடவடிக்கைகளிலும் பட்டையைக் கிளப்பும் மாணவர்கள் இருப்பார்களல்லவா, அவர்கள் தான் இது. செயற்கைப் பொது நுண்ணறிவு நிலையையே இன்னும் எட்டவில்லை என்பதால் செயற்கை அதி நுண்ணறிவு நிலை அதற்கடுத்து எதிர்காலத்தில் இருக்கிறது.