கிருதுமால் நன்செய் – மதுரை மக்களின் வாழ்வியல் சித்திரம்

      துணைஇல் தொடங்கி சில்லறைக் காசுகள் வரையான 16 கதைகளும் நாம் அன்றாடம் சந்திக்கும் எளிய மனிதர்களின் வாழ்வியலைச் சொல்கின்றன. தூக்குச் சட்டியில் (துணைஇல்)  தொடங்கும் கதை சாப்பாட்டுப் பொட்டலத்துடன்(சில்லறைக் காசுகள்) முடிகிறது. இரண்டும் உணவுதான். தானொரு விவசாயி என்பதால் கூட அவரையறியாமலே இப்படி அமைந்திருக்கலாம்.