ஒரு கிறிஸ்துமஸ் மாலை

அவள் அர்சி. கருப்பின வேலைக்காரி. இரவு உணவுக்காக அடுப்படியில் வெந்து கொண்டிருக்கிறாள். ரொம்ப அலுப்பாய் இருந்தாள். மதிய உணவு சமயத்தில் இருந்து அவளுக்கு ஓயாத வேலைகள். வெள்ளைக்கார மொத்தக் குடும்பத்தின் அறைகளையும் அவள் சுத்தம்செய்ய வேண்டியிருந்தது. விடிந்தால் கிறிஸ்துமஸ். அதற்கென வீட்டைத் தயார்செய்ய வேண்டும் அவள். குனிந்து குனிந்து நிமிர்ந்ததில் அவள் முதுகு கடுத்தது. தலை கிறுகிறுத்து மயக்கமாய் இருந்தது. ம். இன்னும் சித்த நேரம். எசமானியும் அவளுடைய ரெண்டு குழந்தைகளும் இராச் சாப்பாடு முடித்து விட்டால் அவளுக்கு விடுதலைதான். வீட்டில் கிறிஸ்துமஸ் மரம் …

நன்றி அம்மணி

பையனின் முகத்தில் இருந்து வியர்வை கொப்பளித்தது. அவன் நெளிந்தான். திருமதி ஜோன்ஸ் நின்றாள். அவனை முன்பக்கமாக சுண்டியிழுத்தாள். அவன் கழுத்தில் இறுகப் பிடிபோட்டாள். அப்படியே தெருவில் நெட்டித்தள்ளிப் போனாள். தன்வீடு வந்ததும், அவனை அப்படியே உள்ளிழுத்தாள்.