குழந்தைகள் கொலு

மீனா திரும்பித் தன் தாயைப் பார்த்தபோது கிழவியே கொஞ்சம் திடுக்கிட்டுப் போனாள்.

‘உள்ளே வராதே, வெளியே நில்லு!’ என்று கரைகடந்த கோபக் குரலில் கத்தினாள் மீனா.

‘ஏன்?’

‘என் குழந்தைகள் கொலு வச்சிருக்கு. அதை நீ பார்க்கக் கூடாது!’‘கொலுவா!’

‘ஆமாம், கொலு! கொலு வச்சிருக்கோம் நானும் என் குழந்தைகளும். நீ பார்க்கக் கூடாது- நீ ஊரார்!’