முன் தயாரித்த கேள்விகள் இல்லாமல், பேட்டி கொடுப்பவரின் பதில்களில் இருந்து அடுத்த கேள்விகள் என மூன்று மணிநேரத்தில் இருந்து அதிகமாக நான்கைந்து மணி நேரம் வரைகூட நீளும் பேட்டிகள் தான் “ஜோ ரோகன் அனுபவம்”. முறைப்படுத்தப்பட்ட ஒழுங்கு இல்லாததனால் இப்பேட்டிகள் வானத்தின் கீழ் பூமிக்கு மேலே உள்ள அனைத்து விஷயங்களையும் ரோகனும், பேட்டி கொடுப்பவரும் பேசிக்கொள்ளும் இயல்பான உரையாடலாக அமைகிறது. கச்சிதம் என்பதோ, துறைசார் முழுமை என்பதோ இதன் இலக்கு அல்ல என்பதால் மட்டுறுத்தலோ, தவிர்க்கப்பட வேண்டிய தலைப்புகளோ பெரும்பாலும் இல்லை எனலாம்
Author: ஜெகன்நாதன்
அமெரிக்கக் கால்பந்து: கலாச்சார தனித்துவம்
என்.எப்.எல் அணிகளுக்கிடையே சமநிலையை தொடர்ந்து தக்கவைக்க சம்பள வரம்பு பின்பற்றுகிறது. அதாவது எல்லா அணிகளும் தங்கள் 53 வீரர்களையும் அவ்வருடத்திய அதிகபட்ச சம்பள வரம்பிற்குள் கையெழுத்திட்டிருக்க வேண்டும். இதனால் ஒவ்வொரு அணியும் தங்கள் தேவைகள் கருதி பணத்தை அள்ளி எறியமுடியாது. உடனடி தேவைகளும், முக்கிய வீரர்களின் சம்பளமும் வரம்பிற்குள் அமைய ஐவீ பல்கலைக் கழகங்களில் பயின்ற வணிக நிர்வாகப் பட்டதாரிகளையும், சட்ட வல்லுநர்களையும் அணிகள் ஆலோசனையாளர்களாவோ, பணியாளர்களாகவோ வைத்திருக்கின்றன.
அமெரிக்கக் கால்பந்து – ஒரு மத அனுபவம்
அறிமுகம் “கடும் போட்டிகள் கொண்ட விளையாட்டுகளுக்கு அழகு என்பது ஒரு குறிக்கோள் அல்ல, ஆனால் உச்சப்பட்ச விளையாட்டுப் போட்டிகள் மனித அழகின் மிகச் சிறந்த ஆடுகளம். இதை தோராயமாக போருக்கும் வீரத்திற்கும் உள்ள தொடர்போடு பொருத்திப் பார்க்கலாம்” டேவிட் பாஸ்டர் வாலஸ் அமெரிக்க விளையாட்டுக்கள் உண்மையில் இன்றைய அமெரிக்காவை “அமெரிக்கக் கால்பந்து – ஒரு மத அனுபவம்”
