தலை வெட்டப்பட்ட கோழி

அந்தச் சிறுமிக்கு இப்போது விரல் நுனியை ஊன்றி தன் உடலை மேலே எழுப்ப வசதியான ஒரு இடம் கிடைத்தது. அந்த இடத்தில் தன் விரல் நுனியை நன்கு அழுத்திக்கொண்டாள். தன் உடலை மேலே உயர்த்த முயன்றாள். ஆனால் அவள் காலை யாரோ மிக இறுக்கமாக பிடித்திருப்பதை உணர்ந்தாள். கீழே பார்த்தாள். அந்த எட்டு கண்களும் அவளுக்கு பெரும் அச்சத்தை அளித்தன.