எப்போதும் அதே பனிப் பொழிவும், எப்போதும் அதே மாமனும்

பின்னாலிருந்து பார்த்தால் பெண்களின் தலையலங்காரங்களெல்லாம் உட்கார்ந்திருக்கும் பூனைகள் போலிருந்தன. தலைமுடியை வருணிக்க நான் ஏன் பூனைகளைப் பற்றிப் பேசுகிறேன்?
ஒவ்வொன்றும் எப்போதும் வேறு ஏதாவதாக ஆகி விடுகிறது. அப்போதுதான் நீங்கள் அதைப் பார்த்தீர்கள் என்றால், ஆரம்பத்தில் அதிகம் உறுத்தாதபடி வேறொன்றாகத் தோன்றும். ஆனால் நீங்கள் அதை வருணிக்கச் சரியான சொல்லைத் தேடும்படி இருந்தால், தெளிவாகத் தெரிகிறமாதிரி வேறொன்றாக. உங்களுக்கு கச்சிதமாக வருணிக்க வேண்டி இருந்தால், அந்த வாக்கியத்தை அப்படிக் கருக்காக ஆக்குவதற்கு, அதற்குள் முற்றிலுமே வேறொன்றைத்தான் தேடிப் பிடிக்க வேண்டி இருக்கிறது.
கிராமத்தில் ஒவ்வொரு பெண்ணுக்குமே நீளமான, அடர்த்தியான பின்னல் இருந்தது. அந்தப் பின்னல் …

அடக்கப் பிரசங்கம்

புகைப்படங்கள் அனைத்திலும், அப்பா ஒரு சைகையின் மத்தியில் உறைந்து நின்றார் புகைப்படங்கள் அனைத்திலும் அப்பா தான் அடுத்து என்ன செய்ய என்பது தெரியாதவர் போலிருந்தார். ஆனால் அப்பாவுக்கு எப்போதும் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்திருந்தது. அதனால்தான் இந்தப் படங்கள் அனைத்தும் பொய்யாக இருந்தன. அத்தனை பொய்ப் படங்களாலும், அத்தனை பொய் முகங்களாலும் அறை சில்லிட்டிருந்தது.