திருவனந்தபுரம் வண்டி வந்தால் தெரிந்திருக்கும்

இவர்கள் அல்லாமல் நடைமேடைக்கான நிரந்தரக் கதாபாத்திரங்கள் சிலர் ஒவ்வொரு நடைமேடையிலும் டீ,காபி, இட்லி, வடை விற்றுக் கொண்டும், மூட்டை இறக்கி ஏற்றிக் கொண்டும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் நடைமேடைக்கு அதிகாரப்பூர்வமான சொந்தக்காரர்கள். இவர்களும் அல்லாமல் வெறும் அனுபவப் பாத்தியதையை மட்டுமே நம்பி நடைமேடைகளில் ஒதுங்கி, கண்களுக்குப் புலப்படாமல் வாழும் நடைமேடை மனிதர்களும் எல்லா நடைமேடைகளிலும் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே பிச்சைக்காரர்கள் இல்லை. இவர்களில் ஒரு சிலர் வாழ்வில் ஏதோ ஒரு ரயிலில் இருந்து இறங்கி மற்றொரு ரயிலுக்கு மாறுவதற்காக இந்த நடைமேடைக்கு வந்தவர்கள் தான்.

பைரவன்

அவன் மனம் நாய்களைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தது. இந்தப் பயம் தனக்கு எப்படி வந்தது என்று யோசித்தான். அவனின் ஆழ்மனம் முதலில் அந்த இடது முழங்கால் நாய்க்கடி கதையை அவனிடமே சொன்னது. கொஞ்சம் வெறுப்பாய்த் தனக்குள் புன்னகைத்துவிட்டு உண்மையான காரணத்தைத் தன் நினைவுகளில் தேடினான். சரி வர ஒன்றுமே புலப்படவில்லை. அறியாத வயதில் வெகு சாதாரணமாய் என்றோ ஒரு நாள், “சரி நாளையிலிருந்து நாம் நாய்களுக்குப் பயப்படுவோம்” என்று முடிவெடுத்து அதன்படியே வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ என்று தோன்றியது!