புத்தக அறிமுகம்: கடலெனும் வசீகர மீன்தொட்டி

This entry is part 11 of 48 in the series நூறு நூல்கள்

பிறத்தலுக்கும், இறத்தலுக்குமான இடைவெளிகளை எப்பொழுதும் நீளப்படுத்திக் கொள்ள ஆசைப்படுகின்றோம். அதை எவ்வளவு நீட்டிக்க முடியும் என்பதில் இயற்கையோடு நமக்கான பிணக்கு இன்னும் தீர்க்கப்படாமலே இருக்கிறது. ஆயினும் எதார்த்த மனநிலையில் கடந்து செல்ல இயலாத அதைரியத்தின் அவலத்தை அழுகையாய், ஒப்பாரியாய் வெளிக்காட்டிக் கொள்கின்றோம்.

முரல் நீங்கிய புறா- நூல் அறிமுகம்

கொண்டாட்டங்களால் உடலெங்கும் புழுதியாய், மனதெல்லாம் வெள்ளையாய் கிராமத்தில் தன் பால்யம் கழித்த தாத்தா தங்க, நாற்கரச் சாலை புழங்கும் நகர வாழ்க்கைக்கு வருகிறார். பள்ளி செல்லும் தன் பேரனுக்கு கையசைக்கிறார். அப்பொழுது அவர் பால்யம் பேரனுக்கானதாய் இருக்கும் போது உடையும் நரையும் வெள்ளையாய் / மனசெல்லாம் புழுதியாய் மாறிப்போன மாற்றத்தை மேவுகிறது “அகவையுள் படிந்த புழுதி”.

கிளையிலிருந்து வேர்வரை – காலத்தின் நீட்சி

தொகுப்பின் முகப்பை அலங்கரித்து நிற்கும் கட்டுரை நடவு நடுவதில் தொடங்கி நெல் மணிகளை உதிர்த்து அரிசியாக்குவது வரையிலான ஒரு நெடிய உழைப்பை அழகிய சித்திரமாய் நமக்குள் தீட்டுகிறது. விளைநிலங்கள் எல்லாம் மனைநிலங்களாக மாறிவிட்ட நிலையில் எதிர்காலத்தில் விவசாயம் பற்றி நம் குழந்தைகளுக்குச் சொல்லவும், எனக்கும் விவசாயம் தெரியும் என நம் பிள்ளைகளிடம் காட்டிக் கொள்ளவும் இந்த ஐந்து பக்கக் கட்டுரையை அப்படியே மனனம் செய்து வைத்துக் கொள்ளலாம்!

நனவுதேசம்

வழக்கமான நூலில் இருந்து மாறுபட்ட ஒரு நூலின் வழி சிங்கப்பூர் என்ற தேசத்தை அறிந்து கொள்ள வைத்த இந்த ஐம்பது கட்டுரைகளையும் வாசித்து முடிக்கும் போது எப்படி ஷாநவாஸிற்கு மட்டும் இப்படியான நண்பர்கள் கிடைக்கிறார்கள்? அண்டை வீட்டுக் காரர்கள் உள்ளிட்ட எவரிடமும் இணக்கமாகப் பழகவும், அவர்களுக்குள் இருக்கும் அறிந்திராத – அறிய வேண்டிய தகவல்களை அடையாளம் காணவும், வாங்கவும் இவரால் மட்டும் எப்படி முடிகிறது? என்ற இரண்டு கேள்விகள் மிஞ்சுகிறது!

காலப் பெருவெளி – கவிதை நூல் விமர்சனம்

வார்த்தைகளை உடைத்து வரிகளை நீட்டித்தல், கவிதை அதன் நிலையை எட்டிய பின்பும் விரித்தல் என கவிதையின் செழுமையை வறட்சியாக்கக் கூடிய விசயங்களால் கட்டமைக்கப்படிருக்கும் சில கவிதைகளுக்கிடையே இத்தொகுப்பில் கவனிக்கத்தக்க கவிதைகளாக மகேஷ்குமாரின் ”வலையில் விழாதவை”, ”ஒற்றை மரம்”, முளைப்பாரி, ராஜீரமேஷின் ”நான்”, மதிக்குமாரின் ”செய்தியாகாதவர்களின் கதை” பாலாவின் “நத்தையின் தலை மீதொரு சிறுவன்“ ஆகியவைகளை அடையாளப்படுத்தலாம்.

கனவின் பயணம்

இந்த ரினிவலோடு என்ன பாடு பட்டாவது கார் வாங்க வேண்டும் என்ற தன் கனவு விதையை முளைக்க வைத்து விட வேண்டும் என நினைத்துக் கொண்டான். இந்தியாவில் இருந்து எடுத்து வந்த அந்தக் கனவு விதையை மீண்டும் கனவு விதையாகவே இந்தியாவிற்கு கொண்டு செல்லக் கூடாது என முடிவு செய்தான். ஊருக்குப் போகும் முடிவை ஒத்தி வைத்து விட்டு மீண்டும் இரண்டு ஆண்டுகளுக்கு பணிநீட்டிப்பு அனுமதிக்கு விண்ணப்பித்து வாங்கினான். இந்த இரண்டாண்டு சம்பாத்தியம் அக்காவுக்கு நகையும், தனக்கு காரும் வாங்க மட்டுமே என திட்டமிட்டுக் கொண்டான்.