காப்ரியெல் கார்ஸியா மார்க்கெஸ்ஸும் அமெரிக்கப் புனைதலும் – 3

வெள்ளம் – தண்டனை – அதன் பின்னே, பறவைகள் கூட மறந்துவிட்ட, புழுதி மற்றும் வெப்பத்தின் விடாப்பிடியான தாக்குதல்களால் மூச்சுவிடவே அரிதாக இருக்கும் ஒரு மகோண்டோவை விட்டுச் செல்கிறது. அங்கு எஞ்சியிருப்பவர்கள் யார் ? சிவப்பெறும்புகளின் சத்தத்தால் தூங்குவதற்கே முடியாத ஓர் வீட்டில் தனிமையாலும் காதலாலும் (காதலின் தனிமையாலும்) ஒளிந்திருக்கும் மீந்தோர்களான ஆரேலியானோவும் அமரான்டா உர்சுலாவும் (Aureliano & Amaranta Ursula). இதன் பிறகு புத்தகத்தின் மூன்றாம் வெளி திறக்கிறது. இதுவே அதன் தொன்ம வெளி – அதன் உடன் நிகழ்வான, புதுப்பிக்கப்படக்கூடிய இயல்பை இறுதிப் பத்திகளுக்கு முன் புரிந்துகொள்ள முடியாது.

காப்ரியெல் கார்ஸியா மார்க்கெஸ்ஸும் அமெரிக்கப் புனைதலும் – 2

நடைமுறைப் போக்கை அனுசரிக்கும் ஜெனோவாவைச் சேர்ந்த கிரிஸ்டோபர் கொலம்பஸ்ஸே தங்கமும் , நறுமணப்பொருட்களும் (Spices) இல்லாத ஓரிடத்தில் அவற்றின் இருப்பை புனைந்து தன்னை பெரும் செலவில் வழியனுப்பிய மகாராணியை முட்டாளாக்கிவிட முடியுமென்று நினைக்கிறார். இறுதியில் ஹேய்டியில் தங்கத்தை கண்டுபிடித்தபின் அத்தீவிற்கு “லா எஸ்பானியோலா” (La Espanola) என்ற பெயரிட்டு அங்கு காஸ்டில்லில் இருப்பதைப் போல் எல்லாம் இருக்கிறதென்றும் , காஸ்டில்லை விட சிறப்பாகவே இருக்கிறதென்றும் கூறுகிறார். இறுதியாக, தங்கமிருப்பதால், பொன்மணிகள் மொச்சைக்கொட்டை அளவு பெரிதாய், இரவுகளின் அழகு அண்டாலூசியாவின் இரவுகளுக்கு நிகரானதாய், பெண்கள் ஸ்பெயினின் பெண்களை விட வெண்ணிறமாகவும், பாலியல் உறவுகள் அதைவிட பரிசுத்தமாகவும் (மகாராணி ஒழுக்க நெறி பேணுபவர் என்பதாலும், வருங்கால நிதிஒதுக்கத்திற்கு பங்கம் விளைவிப்பதை தவிர்ப்பதற்காகவும்)….

காப்ரியெல் கார்ஸியா மார்க்கெஸ்ஸும் அமெரிக்கப் புனைதலும் – 1

மேலே தரப்பட்டுள்ள மேற்கோள்களில் முதலாவது  காப்ரியல் கார்சியா மார்கேஸின் நூற்றாண்டு காலத் தனிமை என்ற நாவலின்  பிரசித்தி பெற்ற ஒரு பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.  அதில், உறக்கமின்மை என்ற கொள்ளை நோயால் தாக்கப்பட்ட பின் மக்கோண்டோ என்ற ஊரே  ஞாபக மறதியால்  பாதிக்கப்படுகிறது. இந்த நோய்மையிலிருந்து மீள  ஆரேலியானோ புவெந்தியா என்பவர்  வலுவானதொரு  சூத்திரத்தை உருவாக்குகிறார்: ஊரிலுள்ள அனைத்துப் பொருட்கள் மீதும்  அவற்றின் பெயர்களை குறியிடுகிறார் – மேஜை, நாற்காலி, கடிகாரம், சுவர், கட்டில், பசு, ஆடு, பன்றி, கோழி. சதுப்பிற்குள் செல்லும் சாலையின் தொடக்கத்தில் மக்கோண்டோ  என்ற குறிப்பலகையையும் , அதை விடப் பெரிதாக, பிரதான சாலையில், கடவுள்  இருக்கிறார்   என்று அறிவிக்கும் மற்றொரு பலகையும் எழுப்பினார்கள்.