பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை சாத்தியமா?

பாகிஸ்தான் ராணுவத்தின் இலக்கு என்ன? இலக்கற்ற இலக்கு அது. இந்தியாமீது வன்மம்; அவ்வளவுதான். ஐ.எஸ்.ஐயின் இலக்கு? இந்தியா பற்றி எரியவேண்டும். பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதக் குழுக்களின் நோக்கம் என்ன? இந்தியா உலகில் எந்தவிதத்திலும் முன்னேறிவிடக் கூடாது. மும்பை 26/11 போல மேலும் பல அநியாயங்களை ஜிஹாத் என்ற பெயரில் செய்யவேண்டும். இப்படி எண்ணற்ற இலக்குகள் இருக்கும்போது குரேஷி என்ன செய்வார்? எந்தப் பேச்சுவார்த்தை நடந்தாலும் அதில் எந்த முன்னேற்றமும் இல்லாதவகையில் இழுத்தடிப்பது மட்டும்தான் அவர்களது நோக்கமாக இருக்கும்.

அந்நிய பல்கலைக்கழகங்கள் இந்தியாவுக்குத் தேவையா?

மத்திய கேபினெட், அந்நிய நாட்டின் பல்கலைக்கழகங்களை இந்தியாவில் அனுமதிப்பது குறித்தான சட்டம் ஒன்றைக் கொண்டுவர அனுமதி அளித்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. அடுத்து நாடாளுமன்றத்தில் ஒரு சட்ட முன்வரைவு வைக்கப்பட்டு, விவாதத்துக்குப் பிறகு ஏற்றுக்கொள்ளப்படலாம்.

இது தொடர்பாக ஒரு கேள்வி-பதில் விவாதம்.

லாபம் இல்லை என்ற நிலையில் மூவர் மட்டுமே கல்வித் துறைக்குள் வருகிறார்கள். ஒருவர்: அரசு. இரண்டாமவர்: மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற தர்ம சிந்தனையுள்ள தனி மனிதர்கள், அறக்கட்டளைகள், மத அமைப்புகள். மூன்றாமவர்: திருடர்கள், பொறுக்கிகள், அரசியல்வாதிகள். இந்த மூன்றாம் நிலையில் உள்ளவர்கள் சட்டத்தைப் பற்றிக் கவலைப்படாதவர்கள். ஜாலியாக சட்டத்தை ஏய்த்து, பணத்தை கறுப்பு, வெள்ளை, நீலம், பச்சை என்று மாற்றி உள்ளிருந்து வெளியே எடுத்துவிடுகிறார்கள். இந்த மூன்றாம் நிலையில் இருப்பவர்கள்தான் இன்று அதிகமாக கல்வியில் நுழைகிறார்கள்.
லாபம் செய்யலாம் என்ற நிலை வரும்போது நியாய சிந்தனை உள்ள பலரும் கல்வித் துறையில் நுழைவார்கள். திருடர்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது.