பள்ளி ஆய்வாளர்

பள்ளி ஆய்வாளர் பதில் பேசவில்லை. இந்த மாதிரி பள்ளிகளை மாவட்டம் முழுவதும் துரத்தித் திரிவது அயர்ச்சியான வேலையாக இருந்தது. அழுக்கடைந்த நகரங்களில், சிதிலமான பகுதிகளில், அவருடைய வாகனம் செல்லமுடியாத தூரத்து மூலைகளில் கிடக்கும் கிராமங்களில். அப்புறம் அந்த பள்ளிக்கூடங்கள் இருக்கும் அவலமான நிலை. இவை எல்லாம் அவருடைய மனதை அழுத்தின. இந்த மூன்று ஆண்டுகளில் இவையெல்லாம் அவருக்குப் பழகிப்போயிருக்க வேண்டும். ஆனால் இல்லை. ஒவ்வொரு பள்ளிக்கூடமும் இப்போதும் வலியேற்படுத்தத்தான் செய்கிறது.