சர்வர் சுந்தரம்

என்னை பற்றி புரளி பேசுவதற்கு என்று ஒன்றும் பெரிதாக இல்லை. அந்த ஒரு புரளியை தவிர! ‘பெருசு மாசத்தில திடீர்னு ஒரு நாள் டிப்டாப்பா டிரஸ் பண்ணிக்கிட்டு எங்கேயோ கிளம்பிடராற்பா. எங்க போறார்னு யாருக்குமே தெரியாது.’

கிட்டு மாமாவின் எலிப்பொறி

“எலிப்பொறிய நல்ல பிராண்டா வாங்கணும் சார். எனக்கு தெரிஞ்ச ஒரு கடை அடையார்ல இருக்கு”. வாட்ச்மேன் சொன்ன விலாசத்தில் கிட்டு மாமா சென்று சேர்ந்தார். கடையில் பட்டையாக திருநீர் அணிந்த ஒரு மெலிய உருவம். டாக்டர் நோயாளியை பார்க்கும் நேசத்துடன் கிட்டு மாமாவிற்கு விசிடிங் கார்டை நீட்டினார். கார்டில் நடு நாயகமாக அந்த பெயர் “எலிப்பொறி நாராயணன்”. நாராயணனின் தொழில் பக்தி கிட்டு மாமாவை கலங்கடித்தது.