ஒரு மகாராணியின் நினைவுக் குறிப்புகள்

மகாராணியும், அவர் குடும்பமும் வருடத்தின் பாதியை ஐரோப்பாவில் கழிக்கின்றனர். அவர்களது பேச்சுகள் முழுக்க Bentley கார்களும், சூதாட்ட விடுதிகளும், விருந்தினர்களுக்கான முடிவிலா கேளிக்கைகளும் நிறைந்திருக்கின்றன. ஐரோப்பாவில் அவர்களுக்கென்று விருந்தினர்கள் யாரும் இல்லாதபோது இந்தியாவிற்குத் திரும்பி இங்குள்ள விருந்தினர்களை உபசரிக்கின்றனர். தனி விமானத்திலோ அல்லது தங்களுக்கென்றே பிரத்யேகமாக மாற்றியமைக்கப்பட்ட P&O நிறுவனத்தின் கப்பலிலோ பயணிக்கின்றனர். இந்த களேபரங்களுக்கிடையே தங்கள் மக்கள் நலனில் அக்கறை கொள்ள அவர்களுக்கு எப்படி நேரமிருந்திருக்கும்?

மாற்றங்களை மறுதலிக்கிறதா இந்திய ராணுவம்?

கார்கில் போர் நடந்துமுடிந்து சென்ற ஜூலையோடு பத்து வருடங்கள் ஆகின்றன. இன்னொரு கார்கில் போர் ஏற்பட்டால் நம்மால் சமாளிக்க முடியுமா? கார்கில் போரில் நாமிழைத்தத் தவறிகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோமா? இந்திய ராணுவத்திடம் நவீனத் தாக்குதல்களுக்கான தளவாடங்கள் உள்ளனவா? – அலசுகிறார் அமர்நாத் கோவிந்தராஜன்: “காஷ்மீர் போன்ற பல்லாயிரம் வீரர்கள் எல்லைப்பகுதிகளில் இருபக்கமும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இதுபோன்ற தவறுகள் நடக்க வாய்ப்புகள் இருந்தாலும் அவற்றை விசாரிப்பதும் ஏற்பட்ட தவறுகளில் இருந்து பாடம் கற்பதும் எந்தவொரு ராணுவ அமைப்புக்கும் மிகவும் முக்கியமான விஷயம். ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் விசாரணை ஒன்றை நடத்தியிருந்தாலும் இன்றுவரை பொதுமக்களின் பார்வைக்கு அந்த விசாரணையின் முடிவு தெளிவாக எடுத்துச் செல்லப்படவில்லை.”