இறைவி

அவளது நிலை, அவளது துயரம், அவள் ஒரு அனாதை என்பது, கர்ப்பிணியான அவள் தம் கணவனால் சந்தேகப்படப்பட்டு அடித்து விரட்டப்பட்ட விவரம், எல்லாம் அவள் செவிகளில் அவள் குரலிலேயே மீண்டுமொருமுறை பேசப்பட்டன.
சில மாதங்களுக்கு முன் பேருந்து நிலைய நடைபாதையில், தம் இரு கை விரல்களும் முழுவதுமாக இழந்து விட்டிருந்த முதியவர் ஒருவர், மிகுந்த சிரமப்பட்டு உணவருந்திக்கொண்டிருந்தது, ஒரு பெட்டிக்கு கடையில் உட்கார்ந்து வியாபாரம் பார்த்துக்கொண்டிருந்த, முகம் முழுவதும் ஏதோ நோய் போல கொப்புளங்களும், வரிகளுமாய் சற்றும் பார்க்க சகிக்காதவாறு இருந்த, ஒருவர், என எப்போதோ பார்த்த அனைத்து சபிக்கப்பட்டவர்களும் அடுத்தடுத்து மனக்கண்ணில் தோன்றிச் சீனிவாசனை ஏதோ செய்தனர்.