ஊடக வெளிச்சம்

புறநானூற்றின் உரிமைத் தமிழ்க்குடி
திருக்குறளின் பட்டாக்காரன்
காப்பியங்களை திரைக் காவியம் செய்தவன்
கம்பனில் காமரசங்கள் பிழிந்தவன்
அறிவது மிகவும் அவசியம் என
ஊடகங்களின் உயர்தரச் செய்திகள்

  1. இமயத் தாரகை ஆம்னிஶ்ரீயின்
    ஐந்தாம் கணவன் ஆண்குறி நீளம்
    மூன்றே அங்குலம்!

2.பிரபஞ்ச காவலன் ஆத்மார்த்த மயன்
காமம் துய்த்த காரிகைக் கணக்கு
ஐந்நூற்று ஒன்றென அறிவீரா நீர்?

  1. ம.பி.க. கட்சி வேட்பாளர்
    அறிவித்த சொத்து மதிப்பு
    66,343 கோடி என்பது தெரியுமா?
  1. செந்தமிழ்ப் போரொளி திவ்யதேஜாஶ்ரீ
    கருத்தரித்த விந்து
    முற்படுத்தப்பட்டதா, பிற்படுத்தப்பட்டதா?
  1. ஏழுலக நாயகி புடண்டம் ஶ்ரீ
    அக்குள் மயிரும் அல்குல் முடியும்
    அறுபத்தெட்டு கோடிக்கு ஏலம்!
    ஏலம் எடுத்தவர் முன்னாள் அமைச்சரின்
    மூத்த குடியாள் மகன் என்பது தெரியுமா?
  1. அட்சய திருதியை தங்கம் விற்பனை
    25,000 கிலோ அறிவீரா?
    இன்னும் இன்னும் இதுபோல் செய்திகள்
    தன்மானத் தமிழன் அறிவு பெருக்கும்
    ஆற்றல் வளர்க்கும் ஆன்ம ஒளிதரும்

போ கூழ் செய்திகள்

ஊச்சாளி நடிகரின் தோள் சாய்ந்து நிற்கும்
சிறுபெண் இன்று யாரெனத் தெரியுமா?
இன்றவள் வம்பு – வார் – கச்சை அளவு 36

கோலிவுட் நடிகையின் மூன்றாம் கணவரின்
மூத்தாள் மகனின் அசையாச் சொத்து
2758 கோடி, அசைவன 676 கோடி

நாற்பத்தெட்டு வயது நிர்வாணஶ்ரீ யின்
திருமணம் உறுதி
மணமகன் சத்ரக்கண்ட் மாநில
உள்துறை அமைச்சரின் கூத்தியாள் மகன்

பாயாசத்தில் ரசம் ஊற்றிக் குடிப்பது
இயக்குநர் பாதாளம் கோலமாச் சோதிக்கு
மிகவும் விருப்பம்
முயன்று பார்ப்பீர்! முக்தி பெறுவீர்!

முந்த்ரிபாக் ஆளுநர் புதல்வன்
முன்னாள் காதலிக்கு பசிபிக் கடலின்
தீவு பரிசு! கப்பல் விமானம் ஸ்பீட்போட் உண்டு!
தீவுப் பங்களா பரப்பறிவீரா?

சிறைச்சாலை உடைத்த இடுப்பெலும்பு அவசர
சிகிச்சைக்கு எதிர்க்கட்சித் தலைவர்
உச்ச நீதிமன்றத்தில் மனு
விசாரணை இருபத்தேழாம் தேதிக்கு
ஒத்திவைப்பு!


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.