வாசகர் மறுவினை


[stextbox id=”warning” caption=”சமர்த்த குப்பை மடல் வடிகட்டி”]

1. இந்த வகைக் கதைகள் கொஞ்சம் பழசு. அறிவியல்/ கலைச் சொற்கள் தமிழில் கொடுக்கப்படுதல் என்பது புதிது, என்பதைத் தவிர கதையில் அதிசயமாகவோ, அல்லது அறிவுப்பெருக்கம் தருவதாகவோ ஏதும் இல்லை. டெட் சியாங் சமீப காலத்திலும், வில்லியம் கிப்ஸன் 20 ஆண்டுகளுக்கு முன்பும் இதை விடப் பல மடங்கு முன் ஊகம் கொண்ட கதைகளை எழுதி விட்டார்கள். செயற்கை எதார்த்தம் (ஆர்டிஃபிசியல் ரியாலிடி) என்று இப்போது புழக்கத்தில் வந்திருக்கிற முப்பரிமாணக் காட்சிப்படுத்தலை வைத்துக் கொண்டு கிப்ஸன் கதைகள் எழுதி 20 வருடங்களாவது ஆகி விட்டன என்று என் நினைவு.
2. சொல்வனத்திலேயே மொபெ செய்யப்பட்ட சில கதைகள் இந்த வகைத்தவை.
3. கதையில் மனிதரின் அறிவு சாராத நடத்தையை மையமாகக் காட்டி எழுதுவது போலத் தோற்றமளித்தாலும், இறுதியில் சித்திரிக்கப்படுவது மனித அறிவின் ஒரு தேர்வினால் செயற்கை அறிவுரு ஒன்று உருவாகி மனிதரின் கட்டுப்பாட்டை மீறி வளர்வதாகக் காட்டும் ‘பேய்க்’கதைதான். இதைத் திரும்பத் திரும்ப எழுதிக் கொண்டிருப்பது பயனற்ற செயல் என்பது என் கருத்து. அதே கருத்தை இதர பதிப்பாசிரியர்கள் கொண்டிருப்பார்கள் என்று நான் கருதவில்லை, சொல்லவும் இல்லை. அவர்கள் என்ன முடிவெடுக்கிறார்கள் என்று பார்ப்போம்.
4. இந்த வகைக் கதைகளை அடிக்கடி மேற்கு எழுதி உளைச்சல்பட ஆதிக் காரணம் ஒன்று உண்டு. யூதத்தில் மனிதர் கடவுளின் படைப்புக்குச் சவாலாகத் தாமும் படைக்க முயன்ற கோலெம் என்ற மண் பொம்மைக்குக் கொடுக்கப்பட்ட உயிர்ப்புடைய விபரீத விளைவுகள் பற்றிய பழங்கதை அது. ஒற்றைக் கடவுள் என்ற கருத்துருக்குள் மனிதக் கற்பனையை அடைக்க முயலும் செமிதியக் கருத்தியலின் பல விகார அணுகல்களில் இது ஒன்று. இந்த பயம் முன்பு வெறும் அச்சுறுத்தல் கதையாகவும். ஒழுங்குக்குள் மனித நடத்தையைக் கொணர முயலும் செயலாகவும் இருந்திருக்கலாம், இன்று இது வெறும் மனப் பேதலிப்புகளில் ஒன்றாக் ஆகி, ஐஸிஸ் போன்ற கொடுங்கோல் அரசியலுக்குக் கூட இட்டுச் சென்றிருக்கிறது. இதன் ஒரு அபத்த விளைவுதான் மார்க்சியத்தின் ‘ஏலியனேஷன்’ (அன்னியமாதல்) என்ற ஆர்ப்பரிப்பான கருத்துருவுக்கும் அடிப்படை. இணைவைத்தல் என்ற ஒரு இஸ்லாமியக் கோட்பாட்டிலிருந்து பிறக்கும் பயங்கரங்களைப் போன்ற கருத்துரு பேதலிப்புதான், மார்க்சின் ரைஃபிகேஷன் என்ற அச்சுறுத்தல் கோட்பாடு. இதையே ஃப்ரெஞ்சு நவீனக் கடப்பு வாதிகள் இன்னமும் தாண்ட முடியாமல் தத்தளிக்கிறதை, மீடியம் ஈஸ் த மெஸேஜ் என்ற கருத்தில் துவங்கி, பதிலியே எதார்த்தமாகி விட்ட பேரவலத்தைப் பற்றிய கருத்தாக்கங்களில் சென்று அந்தரத்தில் தொங்கும் கோட்பாடுகள் அவை. (பார்க்க: Jean Baudrillard (Stanford Encyclopedia of Philosophy)) பாத்ரியோவை ஏகப்பட்டவர்கள் விமர்சித்தாலும், இவர்கள் யாரும் ‘விடுவிப்பு’ என்ற அரதப் பழைய நம்பிக்கை நட்சத்திர உலகுக்கு எப்படிப் போவது என்பது குறித்து ஒரு துப்பும் இல்லாதுதான் நிற்கிறார்கள். அவர்களுடைய பழைய வாடிக்கைக் குதிரைகள் எல்லாம் நலிந்த நிலையில் சோர்வுற்று நிற்கின்றன.
5. ஆஸிமாவின் உளக் கிடக்கையை ஊகிக்கத் தெரிந்த எந்திரங்களை மையத்தில் கொண்ட ஃபௌண்டேஷன் நாவல்கள்: அவை அதிபுனைவு எனவே சொல்லக் கூடிய வகைக் கதைகள், இன்றைய அறிவியல் நவீனத்தின் தன்மையை வைத்து நோக்கினால். ஆனால் பீட்டர் வாட்ஸ் போன்ற அறிவியல் நவீனர்களை விடுத்து நோக்கினால், அனேக ‘கடின’ அறிவியல் நவீன எழுத்தாளர்களும் ஏதோ ஒரு இடத்தில் அதிபுனைவுக்குத்தான் நகர்கிறார்கள். அல்லது ஸ்பேஸ் ஆபெராவுக்குத் தாவுகிறார்கள். அக்கதைகள் எல்லாமே ஸ்டார் வார்ஸ் வகை சினிமா (அல்லது டிஸ்டோபியப் பார்வையைக் கொண்டிருந்தால் ப்ளேட் ரன்னர் வகை சினிமா) கொடுத்த பாதிப்பால் எழுதப்பட்டவை என்று யோசிக்கலாம். ஆஸிமாவும் ஆர்தர் க்ளார்க்கும் துவக்க நிலை செயற்கை அறிவைக் கொண்டு தீட்டிய அதிபுனைவுச் சித்திரங்களை நாம் கடந்து விட்டதான பிரமை நமக்கு இருக்கிறதென்றாலும், அவற்றை நாம் இன்னும் கடக்கவில்லை. அன்று அவை முழுதும் நிரப்பப் பட்ட சித்திரங்கள் போலத் தெரிந்தன. காலப் போக்கில் நம் அறிவியல் ஞானம் (அது கூடதிகமான ஒரு சொல் என்றாலும் வேறு சொல்லைப் பயன்படுத்துவதானால், அறிவுச் சேர்க்கை/ திரட்டு என்பதைத்தான் உடனே யோசிக்க முடிகிறது.) கூடக் கூட, நாம் மேன்மேலும் விவரங்களையும், அவற்றிடையே உள்ள இணைப்புகளையும் பற்றி நிறையத் தெரிந்து கொண்டு வருகிறோம் என்பதால் அந்தச் சித்திரங்கள் கூட திட்டுத் திட்டாகத் தீற்றப்பட்ட ஓவியங்கள் போலவோ, அல்லது 21 ஆம் நூற்றாண்டின் அவசரத்தில், கோட்டுரு போலவோ கூடத் தெரியத் துவங்கி இருக்கின்றன. (இங்கு நிறைய mixing of metaphors நடந்திருக்கிறது. பொறுத்துக் கொள்ளுங்கள்.)
ஆக, நாம் இன்னமும் கோட்டுருக்களால் உந்தப்படும் அளவு, விவரப் பெருக்கத்தால் உந்தப் படுவதில்லை என்று தெரிகிறது. இதை வைத்துக் கொண்டு ஒரு பெரிய பொதுமைப்படுத்தலுக்கு விரையலாமா என்று யோசித்தேன்.
6. அறிவும் அதன் பயன்பாடும் பெருமளவு இப்படித்தான் செயல்படுகின்றன, அதனால் பகுத்தறிவைச் சார்ந்து இயங்குவது என்பது அனேகருக்கு அனேக சமயம் அனேக நிலைகளில் அனேக இடங்களில் சாத்தியமில்லை. ஆங்காங்கே பொதிந்து இருப்பவர்கள், அமைப்பின் பற்பல இடங்களில், காலத்தின் பற்பல கட்டங்களில், சமூகத்தின் பற்பல உளநிலைகளில் செயல்படக் கூடியவர்களாக இருப்பவர்களின் விவர ஞானமும், உந்துதலும், விருப்பங்களும், செயல்பாடும்தான் நிலையைத் தீர்மானிக்கிறது. பகுத்தறிவு அல்ல. விவரப் பெருக்கம் அல்ல. தேர்வுகள். தேர்வுகளும் எப்படிப் புரிந்து கொள்ளப்படுகின்றன என்பதை வைத்துத்தான் சமூக மாறுதல் என்பது நேர்கிறது. அதே நேரம் தனி மனிதர் தம் குறை அறிவும், குறை நினைவு சக்திகளும் கொண்ட ஒரு தேர்வுப் பாதையில் பயணிப்பதால் அச்செயல்களின் கூட்டு விளைவுகள் பெரும் சமூக மாற்றங்களின் ஓட்டத்தை எதிர்த்தோ, அதோடு ஒத்துப் போயோ இயக்கம் பெறுகின்றன என்று தோன்றியது.
இதை ஏன் உங்களுக்கு எழுதுகிறேன் என்றால் இன்று காலை டெட் சியாங் பற்றிய ஒரு செய்தியை சலோன் பத்திரிகை வெளியிட்டது. ஐந்தாறு வருடங்கள் முன்பு டெட் சியாங் என்பவரைப் பற்றி அறிவியல் நவீனத்தில் ஊறியவர்களுக்கு மட்டும்தான் தெரிந்திருந்தது. ஹாலிவுட் திடீரென ஸ்பேஸ் ஆபெராக்களுக்கு வேறு விதமான கதை ஓட்டத்தை நாடத் துவங்கிய போது டெட் சியாங், விலியம் கிப்ஸன் போன்றாருக்கு இடைவெளி கிட்டி உள்ளே நுழைதார்கள். அதன் பிறகு டெட் சியாங்கின் இரு கதைகளுக்கு பெரும் பட்ஜெட் சினிமாக்களுக்கு வாய்ப்பு கிட்டியதால், அவர் இன்று பேசப்படுகிறார். அவருக்கு முன்பே த ட்ரான்ஸ்பேரண்ட் ஸொஸைட்டி என்ற புத்தகத்தை எழுதிய டேவிட் ப்ரின் என்பாரைப் பற்றி யாரும் இன்று பேசவில்லை. ஆனால் டேவிட் ப்ரின் பேசிய பேரொளி வீசும் வெளியில் நிழலில்லாத நிலையில் வாழ மனிதர் பழகி விடுவார்கள் என்று எதிர்பார்த்தார் அவர். மாறாக அந்தப் பேரொளி கடும் இருள் நிழலாக அசலில் இருக்கையில் ஒளி போலத் தோற்றம் கொடுப்பதையே சமூக ஊடகங்கள் கொண்டிருப்பதாக இன்று டெட் சியாங் சொல்கிறார். அதைத்தான் உங்களுக்குச் சொல்ல விரும்பினேன். அந்தச் சிறு அறிக்கைக்கான சுட்டி இதோ: This visionary sci-fi author sees the destruction of human civilization: predatory capitalism – Salon.com
7. இந்தியாவில் இந்து வாதம் தலை தூக்கியதை ஃபாசிசம் என்று வருணிக்கும் இந்திய இடதுசாரிகளும், ‘செகுலரியர்களும்’ அனேகமாக யூரோப்பிய கிருஸ்தவ வாதத்தின் தொடர்ந்த இழிவுப் பிரச்சாரத்தையும், அழிப்பு நோக்கையும் பற்றி எதையும் சொல்வதில்லை. அதன் தாக்கத்தில் இந்தியக் கிருஸ்தவம் எத்தனை இந்திய எதிர்ப்புப் பிரச்சாரமாக மாறி விட்டது என்பதையும் பேசுவதில்லை.
ஆனால் ஸ்பேஸ் ஆபெராவாகத் துவங்கிய ஸ்டார் வார்ஸில் கூட படிப்படியாகக் கிருஸ்தவம் ஊடுருவி மேலேகி விட்டது என்பதை நான் பார்க்கிறேன். ஒரு புறம் வெள்ளையத்தைப் புறம் தள்ளுவதான தோற்றத்தைக் கொடுத்த வண்ணம் – கருப்பர்கள், ஆசியர்கள், பெண்கள் ஆகியோருக்கு நாயகப் பாத்திரம் கொடுப்பதான தோற்றம் கொடுத்துக் கொண்டே- கிருஸ்தவத்தின் சிலுவையையும், இன்று உளுத்துப் போய் விட்ட ஃப்ராய்டியத்தின் எடிபோ காம்ப்ளெக்ஸையும் கொண்டே கதை சொல்லிக் கொண்டிருக்கிறது ஸ்டார் வார்ஸின் இன்றைய வடிவம்.
கிருஸ்தவத்தின் பழி தீர்க்கும் தேவதைகள் (avenging angels) கையாளும் எரியும் கத்தி (flaming swords) என்பதை இந்த முறை அப்பாவைக் கொன்று அவருடைய பாரம்பரியத்தைப் பூண்டோடு ஒழிக்க முயலும் மகனின் கதையாகக் காட்டி, அந்த சாத்தானின் மறு உருவான மகனின் கையில் எரியும் சிலுவையைக் கொடுத்திருக்கிற இன்றைய ஸ்டார் வார்ஸ் படம் இன்னமும் கிருஸ்தவப் பழங்கதையைத் தாண்டி வரவில்லை என்று நாம் அறிய வேண்டும்.
இந்த அப்பாவைக் கொல்லும் மகன் கதைக்கு எதிராக, பண்டைக் கிரேக்கத்தில் (பாகனியத்தில்) மகவைக் கொல்லும் அப்பாவின் கதை ஒன்று உண்டு. அதுவும் பாகனியத்துக்கு எதிராகக் கிருஸ்தவத்தால் பயன்படுத்தப்பட்டாலும், பழைய ஏற்பாட்டுக் கதையில் மகவைக் கொல்லத் தூண்டும் அப்பாவாக யெஹோவா வருகிறார். அது கிருஸ்தவத்துக்கு நினைவிருப்பதில்லை. அதனால்தானே புது ஏற்பாட்டைக் கொண்டு வந்தோம் என்று வாதிடுவார்களோ என்னவோ. ஆனால் அது அத்தனை செல்லாத வாதம். ஏனெனில் இன்றும் ட்ரம்பியம் முன் வைப்பது அந்தப் பழைய ஏற்பாட்டின் பழி தீர்க்கும் கிருஸ்தவம்தானே அன்றி காருண்யக் கிருஸ்தவம் என்ற பொய் நாடகம் அல்ல.
இதை எதிர்ப்பு அணி என்று தம்மைக் கருதும் கருப்பு அமெரிக்கர்களால் கூடக் கடக்க முடியவில்லை. ஏனெனில் காலனியம், ஏகாதிபத்தியம், வெள்ளையம் ஆகியனவற்றோடு பின்னிப் பிணைந்த கிருஸ்தவத்தில் அவர்கள் இன்னமும் ஊறிக் கிடப்பதும், அதன் மூலம் மேற்படிப் புற்று நோய்களைத் தாண்டி விடலாம் என்று நம்பிக் கொண்டிருப்பதும் காரணங்கள் என நாம் கருத இடம் இருக்கிறது. இன்று ஒரு கட்டுரையில் இதைப் பார்க்கலாம்.

Rather than engaging Coates in good faith in order to encourage this next iteration, West wrote a piece in which he comes off a bit like a vengeful father attempting to strangle a child before it has the chance to grow. The misreadings I’ve pointed out above are common among Coates’ critics, but West’s piece stands out for its viciousness and rhetorical sloppiness.

அது இங்கே உள்ள கட்டுரை: On Cornel West’s reckless, disappointing broadside against Ta-Nehisi Coates.
மைத்ரேயன்

[/stextbox]


[stextbox id=”alert” caption=”காலம் காலமாக புதைவாகத் தெரிந்த மிஸோஜைனியை வனபர்வம் தெளிவாக்குகிறதா?”]

வெண்முரசு நாவல் – சொல்வளர்காடு – ஒரு பார்வை: இது விளம்பர முயற்சியா!? நம்மிடையே சமகால நூல்களைச் சீர் தூக்கும் திறமை மிகக் குறைவு. இந்த விமர்சனத்தில் சிலவற்றை வெ.சுரேஷ் திறம்படச் சொல்லி இருக்கிறார்.
அன்பு, விலங்குகள் பற்றிய கருத்துகளில் ஒப்புதல் இல்லை. அதை முன்வைத்துச் சிலாகிப்பது விமர்சனம் இல்லாத அணுகல். எத்தனையோ விலங்குகள் தம்முடைய குட்டிகளை உண்பன, கூட உள்ள சமூகத்தில் இருக்கும் இதர குட்டிகளைக் கொல்வன, பெருவாரியான விலங்குகளிடையே நிதர்சன அணுகல் அதிகம், அன்பு அனேகமாக அருகியது. பாலூட்டிகளில் ஒரு அளவுக்கு மேல் புத்தி பெருகியவைதான் அன்பு போன்ற ஒரு நடத்தையை மேற்கொள்கின்றன. யானையை இந்தியப் பாரம்பரியம் உயர்த்தி வைத்திருப்பதற்கு ஒரு காரணம், தெளிவாகவே யானைகள் இந்த குணத்தைக் காட்டுகின்றன. இன்னொரு விலங்கு மகிஷம். பசுவும் இத்தகைய குணத்தைக் காட்டும்.
முரணியக்கம் பற்றிய கருத்து முழுமையடையாது வெளிப்பட்டிருக்கிறது. எதிரும் புதிரும் சம எடைகொண்டனவாக இருந்தால் ஒன்று மீறி எழுவதற்கு வாய்ப்பு குறைவு, அனேகமாக அசாத்தியம். உலகம் உருண்டை என்பதும், உலகம் தட்டை என்பதும் எதிரெதிர் கருத்துகள் இரண்டுக்கும் சம எடை இருந்தால் அறிவியல் உண்மை என்று ஒன்று எழாது. இது ஒரு சிறு உதாரணம்தான்.
வனபர்வம் இதர பர்வங்களை விடத் தொய்வானது என்ற கருத்து. அதை நான் ஏற்கவில்லை. ஆனால் இதர பர்வங்களின் வேகத்தோடு ஒப்பிட்டால் இது மெதுவானது என்பது சுட்டப்படுதல் நல்லது. ஏன் மெதுவானது என்பதற்கான காரணம் தெரிவிக்கப்பட்டது ஒப்பவில்லை.
வனவாசத்தில் நிகழ்வுகள் எப்போதுமே குறைவாகத்தான் இருக்கும். நீண்ட வனப் பயணம் மேற்கொண்டால் அப்போது தெரியும் அது எத்தனை நிகழ்வுகளே அற்ற மனப்பிரமையை உந்துமளவு சாதாரணங்கள் நிறைந்த பயணமாக இருக்கும் என்பது. இத்தகைய பயணத்தில் ஏதோ ஒரு சில அபாரமான நிகழ்வுகளோ, அல்லது அபத்தங்களோ, அல்லது குரோத விரோதங்களோ, விபத்துகளோ நிகழலாம். அவை பல்லாண்டு கால வன வாசத்தில் ஒரு சிறு பகுதியாகத்தான் இருக்க முடியும். இந்த வனவாசத்துக்குள் நுழையும்போது இளைஞர்களாகச் செல்பவர்கள் வெளி வரும்போது நடுவயதினராக வெளி வருகிறார்கள் எனும் சிறு எதார்த்தத்தை இவரும் கவனிக்கவில்லை, நாவலாசிரியரும் கவனித்ததாகத் தெரியவில்லை. 20களில் இருக்கும் நீங்கள் 30களின் நடுவில் இருக்கும்போது அதே மனிதராக இருப்பீர்களா? பாரதத்தைத் தரையிறக்கி எதார்த்தக் கதையாக்க முயல்பவருக்கு இந்த விவரம் தெரியாமலா இருக்கும்?
நடுவயதுப் பெண்களுக்கு மனமுதிர்ச்சியும், எதிர்காலம் பற்றிய தீவிர நோக்கும் இயல்பாகக் கூடுதலாக அமையும், தாயாக ஆவது என்பது எளிய ஒன்றல்ல.
தவிர மூல நூலில் திரௌபதி ஒரு சக்கரவர்த்தினியாக இயங்கி அதிகார அமைப்பை சமூகப் பிணைப்புள்ள ஒன்றாக ஆக்கினாள் என்பது இருக்கிறதாக விக்கி பதிவு சொல்கிறது. அவள் ஒரு ombudsperson ஆக இயங்கியதை, சத்யபாமாவுடன் திரௌபதி நடத்தும் உரையாடலில் வியாச பாரதத்தில் காணலாம் என்பது விக்கி குறிப்பு. தவிர துரியோதனன் திரௌபதியின் இந்த சமூகசேவை மனோபாவத்தை எத்தனை வெறுக்கிறான் என்பது அவன் தன் தந்தையுடன் நடத்தும் ஒரு உரையாடலில் காணமுடிவதாகவும் விக்கி சொல்கிறது. அதுவும் வியாச பாரதக் குறிப்புதான். அது இங்கே.

Known to few, during this conversation, Duryodhan mentions how he had observed Draupadi serving food to everyone, including physically challenged citizens as the Empress. This is what he says, as per K.M. Ganguly’s English translation of Krishna-Dvaipayana-Vyasa’s Mahabharat,
” And, O king, Yajnaseni, without having eaten herself, daily seeth whether everybody, including even the deformed and the dwarfs, hath eaten or not. ” [11]

இந்த வித அரசியை ஜெயமோகன் ஒரு அதிகார வெறி பிடித்த அரசியாகச் சித்திரிக்கிறார் என்றால் பிழை எங்கே என்று ஒரு விமர்சகர் யோசிக்க வேண்டும். ஆனாலும் வனபர்வத்தை வித்தியாசமான இடம் என்று சொன்னதே சில பிரகாசங்களைக் காண நம்மை அழைக்கிறது என்பது நாம் கவனிக்கத் தக்கது.
விக்கியில் மேலும் கிட்டுகிறவற்றைப் பாருங்கள்:

Fearing the ill-omens, Dhritarashtra intervenes and grants Draupadi a boon. Draupadi asks that her husband Yudisthir be freed from bondage so her son Prativindhya would not be called a slave. In order to pacify her further, Dhritarashtra offers a second boon. Calmly, she asks for the freedom of the Pandavas along with their weapons. When Dhritarashtra asks her for her third wish, she reminds him that a kshatriya woman can seek only two wishes,three would be a sign of greed. Dhristarashtra gives them back their wealth, and grants them permission to go home.
Amused by the sudden turn of events, Karna remarks that they “have never heard of such an act, performed by any of the women noted in this world for their beauty.” He taunts the Pandavas by praising their wife, as she had rescued them “like a boat from their ocean of distress”[16]

இதற்கப்புறமும் யுதிஷ்ட்ரர் இன்னொரு முறை சூதாட்டத்துக்கான அழைப்பை ஏற்கிறார். ஆனால் துரியோதனனைப் போல தனக்குப் பதிலாக இன்னொரு நபரை விளையாடச் சொல்லக் கேட்கும் சாதாரண ராஜதந்திரம் கூட இவருக்கு இல்லை. அது மட்டுமல்ல துரியோதனனுக்குப் பதிலாக இன்னொருவன் ஆடுவதை எதற்கு ஏற்கிறார்? அது என்ன ராஜ தர்மம்? க்ஷத்திரிய தர்மம்? மூடத்தனம்.
இப்படி ஒரு நபரின் அற்ப நடத்தையைத் தேர்வை விமர்சனம் செய்யாமல் அதைப் பாஞ்சாலியின் அரசாளும் பேராசை என்று திரிப்பது, கர்ணனின் கொடூர குணங்களை ஓரம் கட்டி அவனை ஒரு மேன்மையான மனிதன், கொடுமையாக ஒதுக்கப்பட்டவன் என்று தமிழ் சினிமாவும், திராவிடக் கருத்தியலும் திரிப்பதை ஒத்த செயல் என்றுதான் நான் கருதுவேன்.
திரௌபதி ஐந்து பிள்ளைகள், ஒரு பெண் பெற்ற தாய் என்பதும் அவளுடைய வனவாச காலத்துப் பார்வையை மாற்றி இருக்கும். இதைப் பற்றி நாவலாசிரியர் யோசித்திருக்கிறாரா என்பதை நான் அறியேன். விமர்சகர் யோசித்தாரா? கட்டுரையில் அதற்கான அறிகுறியே இல்லை.
இன்னொன்று கவனியுங்கள். திரௌபதிக்குப் பிறந்த ஒரே ஒரு பெண் குழந்தை வனவாசத்தில் பிறந்ததுதான். திரௌபதி தருமரிடம் இருந்து அத்தனை விலகி இருந்தாளா என்று நாம் கேட்கலாம்.
ஆனால் சபா பர்வத்தில் நிகழ்ந்த அவமானங்களை திரௌபதி எப்படி எதிர் கொண்டிருப்பாள் என்ற கேள்வியை இவர் எழுப்புவது நல்ல விஷயம். அதுதான் பாரதத்தின் பல முக்கியப் பிரச்சினைகளில் ஒன்று. கடைசியில் தன் குழந்தைகள் அனைவரையும் கொல்லும் அஸ்வத்தாமனையே திரௌபதி மன்னிக்கிறாள். அந்தப் பெண்ணை ஒரு அகம்பாவியாகச் சித்திரிப்பதை நாம் என்ன சொல்வது?
நாவலாசிரியரின் அபிமான உருவான கிருஸ்துவின் முக்கியக் குணமான கருணை/ மன்னிப்பை திரௌபதியை விட யார் அதிகம் காட்டி இருக்க முடியும்?
இப்படி சில நிறைகள், பல குறைகள். இது நூலறிமுகம், விமர்சனம் இல்லை.
பஞ்சநதம்
[/stextbox]


[stextbox id=”info” caption=”மனம், மூளை மற்றும் பிரக்ஞை”]

ஸியர்லெயின் கருத்துகள் MIT linguist/ political activist நோம் சோம்ஸ்கியின் கருத்துகளுக்கு எதிரானவை, மாற்றானவை என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். இதே விஷயத்தில் அடிக்கடி எழுதுபவர் ஸ்டீவன் பிங்கர். இதை எல்லாம் தாண்டிப் பல தற்கால மொழியியலாளர்கள் இவ்விஷயங்களில் ஆதி மூளை என்ற ஒரு கருத்துருவோடு கட்டிப் புரண்டு கொண்டிருக்கிறார்கள். ஆதி என்ற சொல்லை நான் பயன்படுத்துகிறேன், அவர்களில்லை. அனைத்து மனிதருக்கும் பொது அச்சு ஒன்று உண்டு, அதிலிருந்து சிறு சிறு வேறுபாடுகளின் தொகுப்பாக அந்தந்தப் பகுதி மக்களின் மூளை மாறி, மொழிக் குழுக்கள் உருவாகிப் பல பண்பாடும், பல கருத்தியல்களும் உருவாகின்றன என்பதாகப் பொது அணுகல் இருக்கிறது. இவர்களிடையே உள்ள வேறுபாடுகளின் மையப் பிரச்சினை- இன்னும் இப்படி ஒரு centrality இருக்கிறதா, இல்லை பரிணாம மாற்றலால், மைய அச்சுடைய பாதிப்பு மிகவும் அழிந்து கிளை பிரிந்தது பிரிந்ததுதான் என்று ஆகி விட்டதா என்பது.
அல்லது நான் அப்படிப் புரிந்து கொண்டிருக்கிறேன்.
இந்த விவரங்கள் வெறும் மொழியியல் வேறுபாடுகள் அல்ல. இவை மேலைத் தத்துவத்தின் ஒரு அடிப்படைப் பிரச்சினையான யுனிவர்ஸலிசம் எதிர் ரீஜனலிசம் என்பதன் முடிவைப் பாதிப்பன. இந்த யுனிவர்ஸலிய உந்துதல் உலகெங்கும் பற்பல மதங்களிலும் உள்ளவைதான். இந்து சிந்தனையிலும் அடிக்கடி விதந்தோதப்படும் வசுதைவ குடும்பம் என்பதும், தமிழ்த் தனி நாட்டுக் கூட்டத்தின், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதும் இந்த உந்துதலின் வெளிப்பாடுகளே. மேலைத் தத்துவத்தில் கிருஸ்தவம் இந்த உலகப் பார்வையையும் முன்வைக்கிறது, அதன் எதிரான நாங்களே உய்வை அடைவோம், நீவிர் எல்லாம் பாழ் நரகுக்குத் தள்ளப்படுவீர் என்ற பண்டை யூதத்தின் இருகிளை அணுகலையும் உள்கொண்டிருக்கிறது. இதே பிரிவினைப் பார்வையை கடும் அணுகலாகக் கொண்டது இஸ்லாம். அது சிறிதும் நாசூக்கில்லாமல் நாங்கள் நம்புவதை நீங்கள் ஏற்காத பட்சத்தில் உங்களுக்குக் குடியுரிமையும் கிடையாது, சுவனமும் கிடையாது என்று தெளிவான கடும் (ஃபாசிஸத்தை அல்லது கொலை வெறியை) கொண்டிருக்கிறதாக எனக்குத் தெரிகிறது. ஆனால், அது அமைதி மார்க்கம். கிருஸ்தவம் கருணை மார்க்கம். அப்படி ஒரு patronising அணுகல், ‘மாற்றார்’ என்பாரைப் பார்த்து.
இவற்றை உலகப் பார்வை எதிர் வட்டாரப் பார்வை என்பது மொழியியலிலும், அறிவாற்றல் பற்றி யோசிக்கும் துறைகளிலும் எப்படிச் செயல்படுகிறது என்று பார்த்து அது பற்றிய கருத்துகளை ஒரு முன்னுரை மாதிரி எழுதினால் இந்த வகைக் கட்டுரைகளுக்கு ஒரு நங்கூரம் பாய்ச்சல் கிட்டும். வாசகர்களுக்கு இந்தக் கட்டுரைகளை எப்படி அணுகுவது என்பதற்கு ஒரு பிடிமானம் கிட்டும்.
அ. சதானந்தன்

[/stextbox]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.