மாஸ்கோவில் இருந்து 8,500 கி.மீ. (5,200 மைல்கள்) கிழக்கே மிர்னி நகரம் இருக்கிறது. இங்கே உள்ள வைரச் சுரங்கத்தை 1956ல் ருஷியா கண்டுபிடித்தது. சோவியத் யூனியன் காலத்தில் இங்கே வெளியூர் ஆட்கள் யாரும் உள்ளே வர முடியாது. மிர்னிக்குள் ரஷியர்கள் நுழைவதற்கே சிறப்பு விசா வாங்க வேண்டும். 2001ல் இந்தச் சுரங்கம் கிட்டத்தட்ட மூடப்பட்டது. இன்னும் கொஞ்சம் வைரம் உள்ளே ஒளிந்து கொண்டிருக்கிறது. அதையும் சுரண்டப் போகிறார்கள். கடுமையான குளிர், நிலையற்ற எதிர்காலம், சிரமமான சூழியல் நிலையில் தனிமையில் வாழும் மக்கள் – கார்லோஸ் ஸொயிரோ புகைப்படம் பிடித்திருக்கிறார். (அடிக்கோடிட்ட பெயரில் லிங்க் உள்ளது).