குளக்கரை

[stextbox id=”info” caption=”ஜெர்மனியின் புது தலைவலி”]

Europe+is+under+attack_Terrorism

தேசியத்தின் கட்டமைப்பில் பெரும்பாலான செலவு ராணுவத்திற்கும், புலனாய்வுத்துறைக்கும் செய்யப்படுகிறது. கிட்டத்தட்ட 40 சதவிகிதம் வரையிலான முதலீடு இவற்றில் போடப்படுகிறது என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளில் இச்செலவுகளுக்கு எதிரான அழுத்தம் பரவலாகும்போதெல்லாம் அந்நிய நாடுகளில்  தழைத்து சொந்த மண்ணில் விருட்சமாக வளரும் தீவிரவாத நடவடிக்கைகள் காரணம் காட்டப்படும். இன்று சிரியாவிலிருந்து வந்திருக்கும் அகதிகளுக்கு புகலிடம் தந்திருக்கும் ஜெர்மன் நாடு புதுவிதமான நெருக்கடியை சந்தித்து வருகிறது. காவல் துறையும் புலனாய்வுத் துறையும் தங்களது செய்திகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டியத் தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஜெர்மனியிலேயே பிறந்து ஐ எஸ் தீவிரவாதிகளால் பயிற்சி அளிக்கப்பட்ட மக்கள் பலரும் ஐரோப்பாவில் ஊடுருவியுள்ளதால் போலீஸும் புலனாய்வுத்துறையும் ஒன்றாக வேலை பார்த்தால் மட்டுமே துரிதமாக திட்டங்களைச் செயல்படுத்த முடியும் எனும் நம்பிக்கை வந்துள்ளது.ஆனால் ரெண்டாம் உலகப்போருக்குப் பிறகு இயற்றப்பட்ட சட்டத்தின்படி இவ்விரு துறைகளும் நெருங்கிப்பழகுவது வேரைச்சாய்க்கப்புறப்படும் கோடாரி போலாகிவிடுமோ என அரசு அஞ்சுகிறது.

http://www.spiegel.de/international/europe/terror-expert-peter-neumann-on-the-islamic-state-threat-a-1084205.html

[/stextbox]

 

[stextbox id=”info” caption=”சல்மானின் பத்வா”]

Iran_salman-rushdie-fatwa

அமைதி மார்க்கத்தின் பல கிளைகளும் ஒன்றோடொன்று போட்டி போட்டுக் கொண்டு முட்டாள்தனத்தின் சிகரத்தை ஏறிப் பிடிக்க முயல்கின்றன. இந்தச் செய்தியில் ஈரானின் பல கடும்போக்கு அமைப்புகள் நிதி திரட்டிக் கொண்டிருப்பதைப் பற்றிப் படிக்கலாம். இந்த நிதி ஏதோ உலகில் உள்ள ஏழை பாழை அனாதை, அபலைகளுக்கு உதவி செய்வதற்கு இல்லை. சரி அதுதான் இல்லை இந்த உருப்படாத இந்தியர்களை அமைதி மார்க்கத்துக்கு மடை மாற்றச் செலவழிக்கவாவது இருக்குமா என்றால், அதைத்தான் சௌதி பல பத்தாண்டுகளாகச் செய்கின்றதே, ஈரான் வேறு எதற்குச் செலவழிக்க வேண்டும், இல்லையா? சௌதிக்கு எக்கச்சக்கமாக பணம் குவிந்து இருப்பதால் எதைச் செய்து ஓட்டாண்டியாவது துரிதமாக என்று அந்த நாட்டின் ஆளும் கூட்டத்திற்குத் தெரியாததால், சிரியாவிலும், யேமனிலும் அமைதி மார்க்கத்தைப் பரப்ப முயல்கிறது அந்த நாடு. அங்கே இருப்பவர்கள் ஏற்கனவே அமைதி மார்க்கத்தினர்தானே என்று கேட்டு நம்மைக் குழப்ப முயற்சிக்காதீர்கள். சௌதிக்கார ஆளும் கூட்டத்துக்குத் தம் வழி அல்லது புதைகுழி என்பதுதான் ஒரே வழி. அவர்கள் சொல்வதுதான் அமைதி மார்க்கம், மற்றெல்லா மார்க்கக் குழுக்களும் உதவாக்கரை என்பது அவர்கள் கட்சியா, எனவே சிரியா, யேமன் ஆகிய நாடுகளைத் தரை மட்டமாக்கும் நல் முயற்சியில் சௌதியின் நிதிக்குவியல் கரைந்து கொண்டிருக்கிறது.
ஈரானுக்கு அதற்குச் சமமாகச் செலவழிக்க இப்போதைக்கு வசதி இல்லை என்றாலும் கூடிய மட்டில் அதுவும் வெடிகள், வாணங்கள், புதைகுண்டுகள் எல்லாம் வெடித்துப் பார்க்கிறது. அதுவும் சிரியாவிலும், யேமனிலும் இன்ன பிற நாடுகளிலும் அமைதியாகத் தன் வழி அல்லது புதைகுழி என்கிற ஏழாம் நூற்றாண்டு முதல் துவங்கிய ஒரிஜினல் கருத்தியலைத் தொடர்கிறது. அந்த ஒரிஜினாலிடியைக் கிண்டல் செய்ததற்காக முன்பு ஒருதடவை சல்மான் ருஷ்டி என்கிற வாய்ச்சொல் வீரரைக் கொல்ல வேண்டும் என்று முன்பு ஈரானைக் கொலைக்களமாக ஆக்கிய ஆயதுல்லா முயன்றார். பெரும் பரிசு  ஒன்றை அறிவித்து, ருஷ்டியைக் கொல்பவர்கள் அதைப் பெறலாம் என்று அறிவித்திருந்தார். அவர்தான் இறுதியில் இறந்து போனார். ருஷ்டி ஆசுவாசமடைந்தார். ஆனால் இந்த வருடம் ஈரானில் தேர்தல். எனவே பல கோஷ்டிகள் யார் இருப்பதில் பெரிய கொரில்லா என்று மார் தோள் தட்டி, தரையைக் காலால் உதைத்துப் பாவலா செய்கின்றன. அப்படி ஒரு பாவலாவாக இந்த பெரும் நிதி திராடி அதை ருஷ்டியைக் கொல்பவர்களுக்குப் பரிசாக அளிப்போம் என்ற அறிவிப்பை வெளியிட்டிருப்பதை மேலை ஊடகங்கள் கருதுகின்றன. ருஷ்டி என்ன கருதுகிறார் என்று தகவல் இல்லை. அவருக்கு அடுத்த புத்தகம் விற்க இது நல்ல விளம்பரமாக இருக்குமோ என்னவோ.
இது பற்றி இந்திய முற்போக்குகள் ஏதும் போராட்டம் நடத்துவார்களா என்று நாம் வேடிக்கை பார்க்கலாம். வேலைக்குப் போகாமல் டீ குடித்து அரட்டை அடித்து வெட்டியாக உலவ இன்னொரு வாய்ப்பு என்று அவர்களுக்குத் தோன்றாமலா இருக்கும், தோன்றி இருக்கும். ஆனால் இதைச் செய்வதோ அவர்களின் அபிமான மதமான அமைதி மார்க்கம். எனவே இதை எப்படித் திரித்து இந்துக்களின் சதி, இந்துத்துவாக்களின் ஃபாசிஸம் ஒழிக, இந்தியா உடைக, பாகிஸ்தான் ஜிந்தாபாத், காஷ்மீரை இந்தியாவிலிருந்து விடுவி, மோடியைக் கைது செய் என்ற அவர்களது என்றென்றைக்குமான கோஷங்களோடு இந்த நிதி திரட்டலே யூத, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சதி, ஆர் எஸ் எஸ்தான் இதன் ஆணி வேர் என்றும் போஸ்டர்கள் எழுதலாமா என்றும் யோசிப்பார்களாக இருக்கும். ஜநே பல்கலையைச் சுற்றி உள்ள ஏஸி காஃபிக் கடைகளில் நிறைய சிகரெட் புகை நடுவில் அந்த மேதாவி இளைஞர்களின் ஆக்ரோஷமான வாதப் பிரதிவாதங்களை யாராவது வாசகர்கள் கேட்டால் எழுதித் தெரிவியுங்கள். இவர்கள்தான் எதிர்கால இந்தியாவின் நிர்வாகிகள் என்று ஜநே பல்கலையின் வெத்தான பேராசிரியர்கள் வேறு அடித்துச் சொல்கிறார்கள். ஐயோ என்று பரிதவிக்காதீர்கள். இவர்களையும் இந்தியா கடக்கும்.
 

http://www.nytimes.com/2016/02/23/world/middleeast/irans-hard-line-press-adds-to-bounty-on-salman-rushdie.html

[/stextbox]

[stextbox id=”info” caption=”ரஷ்யாவின் ஏழ்மை”]

Russia_Putin_Recession_Economy_President

சிரியா போரிலிருந்து விலகியதில் தனது காய்களைத் திறமையாக நகர்த்திக்கொண்டிருப்பதாக உலக நாடுகளை நம்ப வைத்திருந்தது ரஷ்யா. புடினும் தனது புது நகர்த்தலாக சிரியாவின் அமைதியே தனது முதல் லட்சியம் எனச் சொல்லி குழப்படிகளிலிருந்து விலகிவிட்டார். ஆனால் தந்து சொந்த நாட்டில் அவரது காலைச் சுற்றி ஒரு புதைகுழி உருவாகிவருவதை பல வருடங்களாகவே அலட்சியம் செய்து வருகிறார். ஏழ்மையும் வேலையில்லாதிண்டாட்டமும் ரஷ்யாவை முடக்கி போட்டு வருவதை கீழுள்ள சுட்டியில் படியுங்கள்.

http://www.theguardian.com/world/2016/mar/22/millions-more-russians-living-in-poverty-as-economic-crisis-bites

[/stextbox]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.