ஜோஹ்ரா ஸேகல் – பேட்டி

தனது 102வது வயதில் சமீபத்தில் மறைந்த ஜோரா ஸேகல் இந்திய நாடக/திரைப்பட உலகில் மிகவும் விரும்பப்பட்ட/ரசிக்கப்பட்ட கலைஞர். இவரது கலையுலகப் பயணத்தின் நீளம் ஏறக்குறைய 80 வருடங்கள் உதயசங்கரின் நாட்டியக் குழுவில் தொடங்கி, ப்ருத்விராஜ் கபூரின் ப்ரித்வி தியேட்டர் நாடங்களில் தொடர்ந்து, பிரிட்டனின் நாடக மேடைகளிலும், சின்னத்திரையிலும் பிரபலமான இவர் 80களில் மும்பைக்குத் திரும்பி மீண்டும் திரைப்படங்களில் சின்னச்சின்னப் பாத்திரங்களேயாயினும் மனதில் நிற்கும் வகையில் தோன்றினார். தமிழ் ரசிகர்களுக்கு இவர் மணிரத்தினத்தின் ‘உயிரே’ படத்தில் ‘நெஞ்சினிலே’ பாட்டினிடையே நடனமாடியது நினைவிருக்கும்.அப்போது அவருக்கு வயது 86. இவர் கடைசியில் நடித்த படம் சஞ்சய் லீலா பன்ஸாலியின் ஸாவரியா. ப்ரித்விராஜ் கபூரிலிருந்து ரன்பீர் கபூர் வரையில் அனைத்து கபூர்களுடன் நடித்துள்ளார். ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் இவருக்கு புகழ் சேர்த்த தொடர்கள் ‘ஜ்வெல் இன் த க்ரவுன்’ (Jewel in the crown) மற்றும் தந்தூரி நைட்ஸ் (Tandoori Naghts)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.