மாயா ஏஞ்சலோ: அஞ்சலி

கவிஞர், எழுத்தாளர், கல்வியாளர், திரைப்படத் தயாரிப்பாளர், மக்களின்  குடிஉரிமைப் போராளி எனப் பன்முகம் கொண்ட மாயா ஏஞ்செலோ தனது 86வது வயதில் மே மாதம் 29, 2014 அன்று காலமானார். தற்கால ஆஃப்ரிக்க அமெரிக்க எழுத்தாளர்களில் முக்கியமானவர், அனைத்து சமூகக் குழுக்களின் அபிமானத்தையும் பெற்றவர். அவருடைய மிகப் பிரசித்தமான புத்தகம் “I know why a caged bird sings” ( கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது என எனக்குத் தெரியும்). இந்தப் புத்தகம் அமெரிக்காவில் அனேகமாக எல்லா உயர் நிலைப் பள்ளி மாணவர்களும் படித்துள்ள புத்தகமாக இருக்கும், அத்தனை பிரசித்தம்.

பல விருதுகளைப் பெற்றுள்ள மாயா ஏஞ்செலோ சமீபத்திய அமெரிக்காவின் செல்வாக்குள்ள குரல்களில் ஒருவராக இருந்தார். இனி வரும் பல பத்தாண்டுகளிலும் சமத்துவத்தையும், குடியுரிமையையும் வேண்டியும், அறவழிப் பண்பாட்டு எழுவதற்குக்ம் அவர் விடுத்த இலக்கியக் கோரிக்கைகள் அமெரிக்க சமூகத்தில் ஒலித்துக் கொண்டிருக்கும்.

Poet Maya Angelou speaks at Coretta Scott King funeral service in Lithonia Georgia