தனியே எங்கே போகிறாய்? – கேசர்பாய் கேர்கர்

3:38 நிமிடம் பாடக்கூடிய இந்தப் பாடலைப் பாடியவர் கேசர்பாய் கேர்கர். உஸ்தாத் அல்லாடியாகானிடம் பல வருடங்கள் இசை பயின்றவர். 1977-இல் வாயேஜர் ஓடம் வின்வெளிக்கு அனுப்பப்பட்டபோது கூடவே சில பாடல்கள் தொகுத்து அனுப்பப்பட்டன. அத்தொகுப்பில் இந்தியாவிலிருந்து சென்ற பாடல் இது. விக்கிபீடியாவில் கிடைத்த இன்னொரு தகவல்: The recording was recommended for inclusion on the Voyager disc by the ethnomusicologist Robert E. Brown who believed it to be the finest recorded example of Indian classical music.  இந்த சிறிய பாடலை ரசிக்க நிச்சயம் ஹிந்துஸ்தானி தெரிந்திருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. [’தனியே எங்கே போகிறாய்?’ – என்பது இப்பாடலின் முதல் வரியின் மொழிபெயர்ப்பு].