கனன்றெரியும் நீர்வெளி

இந்திய இலக்கியத்தின் முதன்மை வரிசையில் வைக்கத்தகுந்த படைப்பாக அதீன் பந்தோபாத்யாய இந்நாவலைக் கொடையளித்திருக்கிறார். பாத்திரங்களின் மீதேறித் தாவித் தாவிச் சென்று கதை சொல்லும் முறைமையைக் கையாண்டிருக்கிறார். ஒரு நிகழ்வின் உச்சத்தில் வாசகனை நிறுத்தி அதற்கு முன்னரோ அல்லது பின்னரோ நடக்கும் ஒரு காட்சிக்குத் தாவிவிடுகிறார்.

சென்சினி

இச்சிறிய எழுத்துலகம் ஆபத்தானது, அதே நேரத்தில் அபத்தமானது என்று எழுதியிருந்தார். கூடுதலாக அவர் சொன்னார், ஒருவரின் கதை ஒரே நீதிபதி முன் இருமுறை வந்தாலும் அதில் ஆபத்து குறைவுதான். ஏனென்றால், அவர்கள் வரும் கதைகளைப் பொதுவாகப் படிப்பதில்லை அல்லது மேலோட்டமாகத்தான் பார்ப்பார்கள். மேலும் “குதிரை வீரர்கள்” கதையும், “கவலைகள் இல்லை” கதையும் வெவ்வேறு அல்ல என்பதை யார்தான் சொல்லக்கூடும், தலைப்புகளிலேயே அதன் தனித்தன்மைகள் தெளிவாக உறைந்திருக்கும்போது? ஒற்றுமைகள் உண்டு, அதிக ஒற்றுமைகள் உண்டுதான், ஆனாலும் அவை வெவ்வேறு.