அன்னையை ஆயிரம் கண்கள் (ஸகஸ்ராக்ஷி) கொண்டவள் என்று வணங்குகிறோம். ஆதிசேஷனுக்கு ஆயிரம் நாவுகள் இருப்பதாகச் சொல்வார்கள். ‘பரா, பஸ்யந்தி, மத்யமா, வைகரி என்று லலிதா சகஸ்ரநாமம் அன்னையைத் துதிக்கிறது. இவைகள் வெறும் பெயர்கள் மட்டுமல்ல, மொழிகளைக் குறிப்பவையும் கூட. இதில் மொழியியலும் அடங்கியுள்ளது. ரிக் வேதம் கூறும் நான்கு வடிவங்கள் இவை. வாக்கு நான்கு வடிவங்கள் எடுக்கிறதென்றும், அவற்றில் மூன்று மறைந்திருக்க ஒலி வடிவாக ஒன்று மட்டும் வெளிப்படுகிறது என்றும் அந்தத் தொல் வேதம் சொல்கிறது.
