50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன், மனிதர்கள் இந்த பூமியில் இல்லை. உயிர்கள் தழைத்தன என்பதை எதை வைத்துக் கொண்டு சொல்லுகிறார்கள் என்று தெரியவில்லை. இன்றைய தொல்லெச்ச எரிபொருள்கள் உருவாவதற்குக் காரணமே, அந்த காலங்களில் மறைந்த உயிர்களே!
Tag: விஞ்ஞான திரித்தல்கள் தொடர்
விஞ்ஞான ரீதியான குற்றச்சாட்டுகள்
செயற்கை கோள் தரவுகள் மூலம், இந்தியா, சைனா, தென்கிழக்கு ஆஸ்ட்ரேலியா மற்றும் பிரேஸில் போன்ற நாடுகளில், பசுமை நிலங்கள் அதிகரித்துள்ளன. இதை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்? இந்த நாடுகளில், காடுகள், விவசாயத்திற்காக அழிக்கப்படுகின்றன. அதே போல, செயற்கை கோள் தரவுகள் மூலம், வடக்கு ஐரோப்பா, ஆசியா, தென் மேற்கு அமெரிக்கா, ஆப்பிரிக்காவில் காங்கோ நதி டெல்டா பகுதி, இவை யாவும் பாலைவனமாகி வருகிறது. பசுமைப் பகுதிகள், காடுகளை அழிப்பதால் அதிகமாவதால், இன்றைய தரவு சரியாக இருப்பதாகத் தோன்றலாம். ஆனால், 1970 –க்கு முன், அமெரிக்க தென் மேற்குப் பகுதிகள் பசுமையாக இருந்தவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
