முனிகளின் காலடிகளில் புல்லை செதுக்கிக் கொண்டிருந்த போது, இன்னும் கொஞ்சம் ஆழமாய் குழி தோண்டினால் இந்த தலைகளின் கீழே உடம்பு இருக்குமா என்று பார்க்கலாமா என்று நினைத்தேன், ஆனால் முனியன் இதைப் பார்த்து தன் காலை தூக்கி என் தலையில் வைத்து விட்டால் என்ன செய்வது என்று பயந்து அதை செய்யாமல் விட்டு விட்டேன். புற்களை செதுக்கி ஓரளவுக்கு சுத்தமான பின் என் தாத்தா நான் சின்னதாய் குவித்துப் போட்ட புற்களைக் கொண்டு போய் மாடுகளுக்குப் போட்டார்.
