லீலாவதியைத் திருப்பி அனுப்புவது எப்படி?

ப்ரொஃபஸர் “அட அது இல்லப்பா! பாஸ்கராச்சார்யா கேள்விப்பட்டுருக்கயா?”என்றார்….
ப்ரொஃபஸர் ,”இல்லப்பா , கணக்குல பெரிய மேதை, பல புத்தகங்கள் எழுதியிருக்கார். கி.பி 1100கள்ள வாழ்ந்தவர். அல்ஜீப்ரா, தசம கணிதம், கால்குலஸ், ட்ரிக்னொமெட்ரி இதுல எல்லாம் புஸ்தகம் எழுதி இருக்கார்.
அப்புறம் பெல் ஈக்வேஷன்தெரியுமா? X2 =1+PY2. அதை சால்வ் பண்ணியிருக்கார். இருபடி சமன்பாடுன்னு சொல்லப்படற க்வாடராடிக் ஈக்வேஷன்ல எத்தனையோ பண்ணியிருக்கார். π மதிப்பைக் கண்டிபிடிச்சுருக்கார். அவரோட சித்தாந்த சிரோமணிங்கிற மஹாபெரிய புத்தகத்தில நாலு பாகங்களான பீஜ கணிதம், க்ரஹ கணிதம், கோலத்யாயா, லீலாவதி இதெல்லாம் ரொம்ப புகழ் பெற்றவை. பல மொழிகள்ல மொழி பெயர்ந்திருங்காங்க,” கொஞ்சம் மூக்சு விட்டார். தலை கலைந்து, கண்ணாடிக்குப் பின்னால் கண் பெரிதாக இருந்தார்.