வெந்து தணியும் நினைவு

அன்று பதினோரு மணிவாக்கில் அந்தச் சந்நியாசியைக் காண ஒரு குடும்பமே வந்திருந்தது. அந்தச் சந்நியாசியின் காலில் ஒரு வயதான அம்மா விழுந்து வீட்டிற்கு வரும்படி அழுதாள். அவர் எந்தச் சலனமும் இன்றி ஒரு புன்னகையோடு நின்றுகொண்டிருந்தார். துறவுக்குத் தன்னை ஒப்புக் கொடுத்துவிட்டதாகவும் தன்னை வற்புறுத்த வேண்டாமென்று பேசிக்கொண்டிருந்தார்.