கடந்த ஜனவரியில் சென்னை இலக்கிய விழாவில் என்னை உரையாற்ற அழைத்திருந்தார்கள். 1 மணிநேர உரை அதுவும் ’’இயற்கையை அறிதல்’’ என்னும் மிக முக்கியமான தலைப்பு , இலக்கிய விழாவில் இப்படியான துறை சார்ந்த தமிழ் உரைகளுக்கான வாய்ப்புக்கள் அரிதினும் அரிதாகவே கிடைக்கும் என்பதால் நான் வழக்கத்தை காட்டிலும் சிறப்பான தயாரிப்புகளோடு எங்கள் கிராமத்திலிருந்து சுமார் 11 மணி நேரம் ரயிலில் பயணித்து சென்னை சென்றிறங்கினேன். மறுநாள் காலை 10 மணிக்கு எனக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. 9 30க்கு என்னை அழைத்து மிக முக்கிய அரசியல் புள்ளி ஒருவர் உரையாற்ற ஒத்துக்கொண்டிருப்பதால் அரைமணி நேரத்தில் என் உரையை முடித்துக்கொள்ளும்படி அறிவுறுத்தினார்கள்
