வேட்டைக்காரன் புதூர் கிராமத்தில் தாத்தா வீட்டில் இருக்கையில், அதாவது சுமார் 40 வருடங்களுக்கு முன்னர், ஒவ்வொரு வாரமும் வீட்டின் மண் தரையை பாட்டி பசுஞ்சாணமிட்டு மெழுகுவார். முந்தின நாளே பறித்து வந்து, நீரில் ஊறிக் கொண்டிருக்கும் நீலி அல்லது அவுரி எனப்படும் சிறுசெடியை அம்மியில் மைபோல அரைத்து, மெல்லிய “நீலி”
