தமிழில் எனக்குப் பிடித்த சொல் ஊரா காடா என்பதில் எனக்குள் நிறைய போராட்டம் நடந்தது. இறுதியில் காடே வென்றது. காடு ஊரைவிடத் தன்னிறைவானது. சங்ககாலத்தில் ஊரே காடாக இருந்தது. ஒவ்வொரு ஊரிலும் காடு இருந்தது. பாலை நிலமும் பாலைவனமாகவே இருந்தது.வயலும் காடாக வயல்காடாக. மலையும் மலைக்காடாக.
Tag: நட்சத்திர செவ்விந்தியன்
முகாமுகம்
அப்போது நோர்வே பேச்சுவார்த்தை சமாதான காலம். நான் வவுனியா நிலப்பாதையூடாக வருவது கண்காணிக்கப்படுவதையும் பொட்டம்மான் விரும்பவில்லை. காட்டுவழியால் புத்தளத்துக்கு போய் அங்கிருந்து மீன்பிடிப்படகில் நீர்கொழும்பு போனேன். நீர்கொழும்பு கடற்கரையில் ஜெகனை சந்திக்கும்போது இரவு பதினொரு மணியிருக்கும். ஒரு வெள்ளைவானில் அப்போதே கிளம்பினோம். ஜெகன் சரளமான சிங்களத்தில் வான் சாரதியோடு உரையாடிக்கொண்டிருந்தான். ஜெகன் என்னைத்தட்டி நான் விழித்தபோது கொக்கட்டிச்சோலை இரவு திருவிழா போல இருந்தது. நாங்கள் இறங்கினோம் ஜெகனிடம் இரண்டு பெரிய கிரிக்கெட் துடுப்பு மட்டை காவும் பைகள் இருந்தன. ஒன்றை என்னிடம் தந்தான்.
