அமெரிக்க அதிபர் தேர்தல் (2024) வியூகங்கள்!

நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் ட்ரம்ப்புடன் முன்பு தனக்கு இருந்த தொடர்பைப் பற்றி 2016 தேர்தலில் பேசாமல் இருக்க லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார். ட்ரம்ப்பின் முன்னாள் வழக்கறிஞரான மைக்கேல் கோஹன், ‘ஹஷ்’ பணம் செலுத்தி பிரச்சார நிதி மீறல் வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தற்பொழுது விசாரணை நடந்து வருகிறது. இது ட்ரம்ப்பைச் சட்டவிரோத நடவடிக்கைகளில் சிக்க வைக்கக்கூடும். ஆனால் ஸ்டார்மி டேனியல்ஸ் தொடுத்த ‘அவதூறு’ வழக்கில் ட்ரம்ப்பிற்குச் சாதகமாக தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.

அமெரிக்க ஜனநாயகக் கட்சி மாநாடு-2020

மூன்றாம் நாள் மாநாட்டில் முன்னாள் அதிபர் வேட்பாளர் ஹில்லரி கிளிண்டன், சபாநாயகர் நான்சி பெலோசி, செனட்டர் எலிசபெத் வாரன், முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர் கேபி கிப்பர்ட்ஸ், துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் எனப் பெண்களின் குரலே ஓங்கி ஒலித்தது.

அன்றைய தினம் அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தது முன்னாள் அதிபர் ஒபாமாவின் பேச்சுதான்……கடந்த நான்கு வருடங்களில் அதிபர் ட்ரம்ப் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தியதோடு, தன்னுடைய முதிர்ச்சியற்ற, அடாவடித்தனமான பல அரசியல் நிர்வாக முடிவுகளினால் நாடு பலவகையிலும் தன் மதிப்பை இழந்து எல்லாத்தரப்பிலும் பாதிக்கப்பட்ட, அமைதியற்ற ஒரு தேசமாக மாறியிருப்பதாகக் குற்றம் சாட்டினார். இந்த அவலத்தில் இருந்து அடுத்த நான்கு ஆண்டுகளில் நாட்டை மீட்டெடுக்க, அனைவரையும் அரவணைத்துச் செல்லக்கூடிய பண்பான, மனிதநேயம்கொண்ட பைடனே பொறுத்தமான நபராக இருப்பார் – என்பதாகப் பேசினார் ஒபாமா.

இஸ்லாமியத் தீவிரவாதமும் அமெரிக்கப் பிடிவாதமும்

காசிமெ சுலைமானி, ஈரானில் கொண்டாடப்பட்ட மூத்த ராணுவத் தளபதி. அந்நாட்டின் பெருந்தலைவர் அயதுல்லா அலி ஹோமேய்னிக்கு அடுத்த நிலையில் மக்களால் அதிகம் மதிக்கப்பட்டு மத்திய கிழக்கிலும் தனிப்பெரும் சக்திவாய்ந்த நபராக கருதப்பட்டவர். அமெரிக்காவிற்கு எதிராக நடக்கும் போரில் ஈடுபட்டு வந்த ஈரானின் ராணுவப் பிரிவின் அங்கமாக விளங்கும் குத்ஸ் “இஸ்லாமியத் தீவிரவாதமும் அமெரிக்கப் பிடிவாதமும்”