அறியமுடியாமையின் பெயர் ராமன்

சிருஷ்டிக்கு முன் எங்கும் இருளும் நீரும் மட்டும் நிறைந்திருந்த ஒரு பிரளய காலத்தில், மஹாவிஷ்ணு இந்த உலகனைத்தையும் விதையென தன் வயிற்றில் அடக்கி கொண்டு, நீரில் தனது கால் கட்டை விரலைச் சுவைத்தபடி ஒரு ஆல் இலையில் சிறு குழந்தையாக மிதக்கிறார். அந்த குழந்தை சுற்றி இருக்கிற நீரையும், இருளையும் பார்த்து திகைக்கிறது. இவையெல்லாம் என்ன? என்று அதன் மனதில் முதன் முதலாக ஒரு கேள்வி எண்ணமாக எழுகிறது.
மஹாவிஷ்ணுவாகிய குழந்தை மட்டுமல்ல, அறியமுடியாமையை நோக்கிய இந்த கேள்வியை நாம் அனைவரும் எதோ ஒரு கட்டத்தில் எதோ விதத்தில் சந்திக்கிறோம்.